கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள்
பத்திர பதிவுக்கு ஐகோர்ட் மீண்டும் தடை

சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை களை புதிதாகவோ, மறுபதிவு செய்யவோ, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அங்கீகாரம், இல்லாத, வீட்டு, மனை,பத்திர பதிவு, ஐகோர்ட், மீண்டும், தடை

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யவும், 2016 செப்., 9ல், தடை விதித்தது.

தடையை நீக்கக் கோரி, நில வணிகர்கள், உரிமையாளர்கள் என, பலரும் மனுக்கள் தாக் கல் செய்தனர்.இவ்வழக்கு,தற்காலிக தலைமை

நீதிபதி எச்.ஜி.ரமேஷ் அடங்கிய, முதல் பெஞ்ச் முன்,கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவு:

தமிழக அரசு, பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. எனவே, அங்கீகாரமில் லாத வீட்டு மனைகள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்யப் பட்டிருந்தால், அந்த நிலங்கள் தொடர் பான உரிமை மாற்ற ஆவணங்களை, பத்திரப் பதிவு அதிகாரிகள் பதிவு செய்யலாம்.

அதே நேரத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்படாத சொத்துகளை பொறுத்தவரை, உரிமை மாற்ற ஆவணங்களை பதிவு செய்யக் கூடாது. இந்த உத் தரவு, வழக்கின் மீதான இறுதி உத்தரவுக்கு கட்டுப் பட்டது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டிருந் தது. இதையடுத்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி ஆஜராகி, ''அங்கீகார மில்லாத வீட்டு மனைகளை வரன் முறை செய்வ தற்கான நகல் விதிமுறைகள் தயா ராகி விட்டன. அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டு உள்ளது; விரைவில் ஒப்புதல் பெற்று

Advertisement

விடுவோம்,'' என்றார்.

வழக்கறிஞர் ராஜேந்திரன்:
2016 செப்., 9ல், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு பின், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன. அதுகுறித்து, விசாரிக்க வேண்டும். எவ்வளவு பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன என்ற விபரங்களை பெற வேண்டும்.

நீதிபதிகள்: நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு பின், அங்கீகாரமில்லாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால், அவை செல்லாது. இந்த வழக்கு விசாரணையை, மே, 4, 5ம்தேதிகளில் நடத்தலாம். அதுவரை, 2016 செப்., 9ல் பிறப்பித்த உத்தரவை தொடரலாம்.

மூத்த வழக்கறிஞர்கள் நளினி சிதம்பரம், ராமகிருஷ்ணன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்க றிஞர் மேனன் ஆகியோரும் வாதாடினர். அதன் பின், வழக்கு விசாரணையை, மே, 4க்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

மறு உத்தரவு வரும் வரை, புதிதாக பத்திரப் பதிவோ, மறு பத்திரப்பதிவோ மேற்கொள்ளக் கூடாது; 2016 செப்., 9ல் உயர் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவுக்கு பின், மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவு விபரங்களை, அரசு தாக்கல் செய்யவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ma arrasu kanikairaj - Trichy,இந்தியா
22-ஏப்-201721:36:13 IST Report Abuse

ma arrasu kanikairajதமிழ்நாட்டில் தற்போது நிலவும் பண தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை,வாங்க,விற்க முடியாததால் ஏற்படும் இன்னல்கள், தடை உத்தரவு கொடுக்கும்போதே நீதிபதிகள் யோசிக்கவேண்டும். ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக,தவறான மனநிலையில் உள்ள நீதிபதிகள் தவறிழைத்துவிடுவார்கள். அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பொதுமக்களுக்குத்தான்.

Rate this:
Subramania Bhattar - madurai,இந்தியா
22-ஏப்-201719:17:08 IST Report Abuse

Subramania Bhattarஇந்த தீர்ப்பு செல்லுமா அல்லது ஒரு நீதிபதி சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளை விசாரணைக்கு வருமாறு நோட்டீசு கொடுத்துள்ளாரே, அது செல்லுமா?

Rate this:
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
22-ஏப்-201718:06:12 IST Report Abuse

samuelmuthiahrajவழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு பாராட்டுக்கள் உங்கள் சந்ததி சகல ஆசிகளும் பெற ஆண்டவர் அனுக்கிரகம் அதிகமாகவே இருக்கும் காரணம் நீங்கள் ஓர் தனிமனிதராக தைரியமாக நேர்மைக்கு பாடுபடும் வழக்கறிஞராய் இருப்பதாலே

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X