பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்-25-ல் லாரிகள் ஓடாது:லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Updated : ஏப் 23, 2017 | Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (4)
Advertisement
ஏப்-25,லாரிகள், ஓடாது, லாரி, உரிமையாளர்கள், சங்கம் அறிவிப்பு

சென்னை: ஏப்- 25-ல் நடைபெற உள்ள முழு அடைப்பு போரட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளிக்க உள்ளதல் அன்றைய தினம் லாரிகள் ஓடாது என லாரி சங்கத்தின் தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

டில்லியில் 40 நாளாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 25-ம் தேதி மாநிலம் முழு அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது. இதனையடுத்து அன்றை தினம் லாரிகள் இயக்கப்பட மாட்டாது என கூறினார்


சினிமா காட்சிகள் ரத்து


விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப் -25ல் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, அன்றையதினம் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது..


55 ஆயிரம் மணல் லாரி ஓடாது



தமிழகம் முழுவதும் வருகிற 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறி உள்ளார்.


அரசு பணியாளர்கள் ஆதரவு

சங்கத்தின் மாநிலத் தலைவர், செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை:எட்டாவது ஊதியக் குழு பணிகளை முடித்து, ஊதிய உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊதிய உயர்வு ஆணைகள் வெளியிடும் வரை, அனைத்துப் பணியாளர்களுக்கும், 20 சதவீத, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, அரசுப் பணியாளர்கள் அனைவரும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-201711:16:58 IST Report Abuse
எப்போதும் வென்றான் நல்ல முடிவு ..இப்போதாவது மொத்த தமிழகமும் ஒன்றிணைய வேண்டும்...மற்ற மாநிலக்காரன் அஞ்ச வேண்டும்..மத்தியிலும் தான்...
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
23-ஏப்-201711:12:37 IST Report Abuse
Needhiyin Pakkam Nil வாழ்த்துக்கள்.............
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201708:20:37 IST Report Abuse
Srinivasan Kannaiya விவசாயிகள் தான் போராட்டத்ததை வாபஸ் வாங்கிவிட்டார்கள்... அப்பறம் ஏன் வேலை நிறுத்தம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X