இன்று (ஏப்-23)மீண்டும் ஆஜராக தினகரனுக்கு உத்தரவு

Updated : ஏப் 23, 2017 | Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (25)
Advertisement
தினகரன், நாளை (ஏப்-23), மீண்டும், ஆஜராக, உத்தரவு

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தினகரனிடம் 7 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர், மீண்டும் இன்று(ஏப்-23) பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராகுமாறு டில்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.


வழக்கு விபரம்:

இரட்டை இலை சின்னம் பெற டில்லியில் தரகர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில் தினகரன் நேற்று (ஏப்22) டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.


7 மணி நேர விசாரணை

நேற்று பிற்பகல் (3 .15மணி) துவங்கிய விசாரணை இரவு 10 .15மணி வரை நடந்தது. சுகேஷ் சந்திரனை வைத்து டில்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் விசாரணையைமுடித்தது. தினகரன் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையின் முடிவில் தினகரனை இன்று (ஏப்-23)பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜாராகுமாறு டில்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201712:35:59 IST Report Abuse
Srinivasan Kannaiya இளம் கன்று பயம் அறியாது... அவசியம் போகும்... எதிலும் இருந்து காப்பாத்த சசி அம்மா உள்ளார்கள் என்ற குருட்டு தகிரியத்தில்
Rate this:
Share this comment
Cancel
Rajah - Chennai,இந்தியா
23-ஏப்-201710:51:10 IST Report Abuse
Rajah ஒரே ஒரு சாதாரண பள்ளி மற்றும் அதன் கட்டிடத்துக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினையில்தான் எம்ஜிஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்டார். எம்ஜிஆர் சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. ஆனால் ஜெயலலிதா பினாமி பெயர்களின் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கள் பல ஆயிரம் கோடிகள்.80க்கும் மேற்பட்ட அந்த பினாமி நிறுவனங்கள் பெரும்பானவற்றில் இயக்குநர்களாக இருப்பவர்கள், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதியின் கணவர் டாக்டர் சிவக்குமார் என்கிற கே.எஸ்.சிவக்குமார் மற்றும் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் கலியபெருமாள். இந்த பினாமி நிறுவனத்தின் பெயர்களில் இந்தியா முழுக்க கோடிக்கணக்கான சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன. இது தவிர இந்த பினாமி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம் குவிந்து கிடக்கிறது. இந்த சொத்துக்களுக்காக இந்த குடும்பத்துக்குள் விரைவில் நடக்க உள்ள குடுமிப்பிடி சண்டை வீதிக்கு வரத்தான் போகிறது.இதன் முன்னோட்டமாக கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது டிடிவி மகாதேவன் மரணத்துக்கு முன்னால். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எதிரே உள்ள வீட்டை ஜெயலலிதா ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கிப் போட்டுள்ளார். இந்த ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சசிகலா சிறை செல்வதற்கு முன்னதாக, அந்த வீடு அவர் தம்பி மகன் ஜெயந்த் திவாகரனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் எஸ்டேட்ஸின் இயக்குநர்களாக கேஎஸ்.சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் இருந்து வருகின்றனர். வேதா இல்லத்தின் எதிரே உள்ள அந்த வீடு பல ஆண்டுகளாகவே ஜெயலலிதாவின் உபயோகத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் பலர் அங்குதான் தங்குவர். சசிகலா சிறை சென்ற பிறகு, அந்த வீட்டை கைப்பற்ற கேஎஸ்.சிவக்குமார் முயற்சி எடுத்துள்ளார். இந்த தகவல் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு தெரிய வருகிறது. உடனடியாக வேதா நிலையம் விரைந்த திவாகரன், இந்த விஷயம் குறித்து சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டு, அவரை தாக்கியுள்ளார். பிறகு உடன் இருந்தவர்களால் சமாதானப்படுத்தப்பட்டுள்ளார். பஞ்சாயத்து, மன்னார்குடி மாபியாவின் மூத்த உறுப்பினரான சசிகலாவின் கணவர் நடராஜனிடம் செல்கிறது. அவர் அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கி ஒரு ட்ரஸ்ட் அமைக்கலாம். அந்த ட்ரஸ்டில், ரொக்கம் உள்ளிட்ட அத்தனை சொத்துக்களும் உள்ளடக்கப்படும். அந்த ட்ரஸ்டில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சொத்துக்களை ட்ரஸ்ட் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள டாக்டர் சிவக்குமாரும், கார்த்திகேயன் கலியபெருமாளும் இது போன்ற எந்த சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பதுதான் கடைசித் தகவல். தற்போது அரசியல் அதிகாரமும் கைவிட்டுப் போயுள்ளதால், வரக்கூடிய கால கட்டங்களில் இந்த மோதல் முற்றுவதற்காக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மக்களிடமிருந்து கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களுக்காக இந்த குடும்பம் அடித்துக் கொண்டு அழிந்தால் அது நமக்கு உள்ளபடியே மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
Rajah - Chennai,இந்தியா
23-ஏப்-201710:42:48 IST Report Abuse
Rajah டிடிவி தினகரன் ஜென்டில்மேன் போல ஒதுங்கி விட்டாரே…. இனி மன்னார்குடி மாபியாவின் தலையீடு இல்லாமல் போய் விடுமா. அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார்களா ? மன்னார்குடி மாபியாவின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் திருடர்கள். அவர்கள் பிறப்பு முதலே திருடுவதற்கு பழகியவர்கள். திருட்டுத்தனம் அவர்கள் உடன் பிறந்தது. கொள்ளையடிக்காமல் அவர்களால் இருக்கவே முடியாது. மன்னார்குடி குடும்பத்துக்குள் மோதல் முற்றி அவர்கள் ஒவ்வொருவரும் அடித்துக் கொண்டு அந்த மோதல் வீதிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X