நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை: நிதிஷ்குமார்

Added : ஏப் 23, 2017 | கருத்துகள் (13)
Advertisement
நாடு, முழுதும், மதுவிலக்கு, தேவை, நிதிஷ்குமார்

மும்பை:தனது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மராட்டிய கிளை நடத்திய பேரணியில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடு முழுதும் மதுவிலக்கை அமல் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்நடவடிக்கையை நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் தேவைப்படும் என்றார் . சீனாவில் போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டபின்னரே அங்கு வேகமான வளர்ச்சி ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.


போதை வஸ்துக்கள் தடை

நாம் சீனாவுடன் போட்டியிட வேண்டுமென்றால் போதை வஸ்துக்களை தடை செய்ய வேண்டும்.பிகாரில் மதுவிலக்கை கொண்டு வந்த போது அரசின் வருவாயை அது பாதிக்கும் என பலபேர் எச்சரித்தனர். ஆனால் மாறாக அரசின் வருவாய் முன்பு போலவே இருக்கிறது. எப்படியெனில் மதுவிற்கு செலவிடப்படும் தொகை பால் போன்ற பொருட்கள் வாங்க செலவிடப்படுவதால் அரசின் வருவாய் பாதிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். முன்பு கிடைத்து வந்த ரூ 5 ஆயிரம் கோடிக்கு இணையான வருவாய் இப்போதும் கிடைக்கிறது என்பதைச் சுட்டிகாட்டினார்.அடித்தட்டு மக்கள் முன்னேற தனது கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-ஏப்-201711:17:36 IST Report Abuse
S.Baliah Seer பீகார் முதல்வரின் வார்த்தையை கவனியுங்கள்.முன்பு மதுவுக்காக செலவிடப்பட்ட தொகை தற்போது பால் போன்ற பொருட்கள் வாங்க செலவிடப் படுவதால் மது மூலம் கிடைத்த 5 ஆயிரம் கோடி வருவாயில் எந்த பாதிப்பும் இல்லை.அவர் நல்லெண்ணம் படைத்தவர்.நல்லதை செய்கிறார்.மத்திய அரசு மீண்டும் மது விலக்கை அமல் படுத்த வேண்டும்.இல்லையேல் மாநில அரசுகளே மதுபான தொழிற்சாலைகளை நடத்தும் காலம் விரைவில் வரும்.
Rate this:
Share this comment
Cancel
dharma - chennai,இந்தியா
23-ஏப்-201709:41:24 IST Report Abuse
dharma என்னதான் யோகி ஆதிதியா சபாஷ் வாங்கினாலும் அது சின்ன விஷயம்தான் ஆனால் நீங்கள் செய்த காரியம் நாட்டில் எந்த முதல்வரும் செய்ய முடியாத மிக பெரிய விஷயம். மொத்தத்தில் சபாசை மொத்த குத்தகைக்கே எடுத்து விட்டிர்கள்.அடுத்து ஊழல் செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய ஏதாவது சட்டம் கொண்டு வாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
23-ஏப்-201708:57:39 IST Report Abuse
Gopalakrishnan மது விலக்கு என்பது தேவையில்லை நிதிஷ் .. தங்களை போன்ற பதவி ஆசை கொண்டவர்களை மக்கள் விலகினால் போதும் ... நாடு நலம் பெறும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X