அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 நிபந்தனைகள்:ஓ.பி.எஸ்., அணி திட்டவட்டம்

Added : ஏப் 24, 2017 | கருத்துகள் (28)
Share
Advertisement
ஓபிஎஸ், கேபி முனுசாமி, சசிகலா, இடைப்பாடி பழனிசாமி, பேச்சுவார்த்தை

சென்னை : எடப்பாடி அணியினரை யாரோ இயக்குகிறார்கள் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என கூறப்பட்டது. இரு அணிகள் சார்பிலும் குழு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் இடம்பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பை விரைவில் முதல்வர் வெளியிடுவார் எனவும், அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் ஓபிஎஸ் அணியினரும், இபிஎஸ் அணியினரும் இன்று அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர்.


யாரோ இயக்குகிறார்கள் :


ஆலோசனை பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெ., மரணத்திற்கு பிறகு கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. ஜெ., மரணத்தில் நிலவும் மர்மத்தை போக்குவதற்காக மத்திய அரசு உதவியுடன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மாநில அரசு வலியுறுத்த வேண்டும். கட்சியை கபளீகரம் செய்ய முயற்சிக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். இந்த இரு கோரிக்கைகளை முன்வைத்தோம். கோரிக்கைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறி இருந்தோம்.

இந்நிலையில் அந்த அணியினர் தானாக முன் வந்து பேச்சுவார்த்தை தயார் என்றனர். குழு அமைத்ததாகவும் அறிவித்தனர். முதலில் அறிவித்தவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என 2 நாட்களாக காத்திருந்தோம். ஆனால் இப்போது ஒருவர் குழு அமைக்கவில்லை என்கிறார். அவர்களின் இந்த முரண்பட்ட அறிவிப்பால் அவர்களை யாரோ இயக்குகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்போதும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றினால், எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தையை துவக்க தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா
25-ஏப்-201706:40:02 IST Report Abuse
Sundararaman Ramanathan This is nothing but cheating. The symbol will be decided by EC.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஏப்-201717:09:58 IST Report Abuse
Endrum Indian இரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது, வேறு கோரிக்கை இருந்தால் கூறுங்கள் சசி ஆதரவில் இயங்கும் இடையர் பாடி சசிசாமி அதாவது பழனிசாமி அணியினர் சொல்வது.
Rate this:
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-201716:00:30 IST Report Abuse
PRABHU இந்த முனுஸ்வாமி ரொம்ப மோசக்காரன்....ஒபிஸ் இவரை ஒதுக்கி வைப்பது நல்லது....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25-ஏப்-201704:12:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அது சாக்கடை, இதுவும் சாக்கடை.. அதிலே ஒண்ணுலே இருந்து இன்னொன்னு ஒதுங்கி இருக்கணுமாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X