அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக அணிகள் பேச்சு ரத்து?

Updated : ஏப் 24, 2017 | Added : ஏப் 24, 2017 | கருத்துகள் (79)
Share
Advertisement
அதிமுக, இரு அணிகள், பேச்சு, ரத்து

சென்னை: அதிமுக அம்மா மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இடையே பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று (ஏப்.24) காலையில் ஓ.பி.எஸ்., அணி தரப்பை சேர்ந்த முனுசாமி அளித்த பேட்டியில் ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணையும், சசிகலா நீக்கமும் எங்களின் முக்கிய நிபந்தனை. ஆனால் அந்த அணி தரப்பில் ஒவ்வொருவரும் ஒரு வித கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு, அந்த தரப்பு அணியை யாரோ வெளியில் இருந்து இயக்கு இயக்குகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.எடப்பாடி குழு தலைவர் வைத்திலிங்கம் பேட்டி:

முனுசாமி பேட்டி அளித்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு பேட்டி அளிக்கப்பட்டது. இரு அணிகள் இணைவது தொடர்பாக முதல்வர் தரப்பை சேர்ந்த குழுவின் தலைவரான வைத்திலிங்கம் நிருபர்களை சந்தித்தார். இவர் பேசுகையில்:
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு இப்போதே நிருபர்கள் மூலம் கேட்டு கொள்கிறேன். ஆனால் முனுசாமி அளித்த பேட்டியில் இரண்டு நிபந்தனை வைக்கிறார். ஜெ., மரண குறித்த விசாரணை மற்றும் சசி பொது செயலர் பதவி பறிப்பு ஆகியன. இரண்டும் முறையே கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் முன்பு உள்ளது. இதன் மூலம் வரும் முடிவின்படியே முடிவுகள் எடுக்கப்படும். பேச்சு வார்த்தைக்கு வருகிறீர்களா என நான் மனோஜ் பாண்டியனிடம் போனில் கேட்டேன். ஆனால் பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை என மனோஜ் பாண்டியன் எங்களிடம் கூறி விட்டார்.
பேச்சு வார்த்தைக்கு முன்பே நிபந்தனை வைத்தால் முட்டுக்கட்டை ஏற்படும். நிபந்தனை வைப்பதுடன், ஓ.பி.எஸ்., அணியினர் மாறி மாறி பேசி வருகின்றனர். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.இதனை தொடர்ந்து இரு அணிகள் இணைப்பு பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
24-ஏப்-201722:57:30 IST Report Abuse
X. Rosario Rajkumar வைக்கப்போகும் இரு நிபந்தனைகளும் சுருக்கென்று இருக்கிறது.
Rate this:
Cancel
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
24-ஏப்-201720:58:04 IST Report Abuse
Bala Subramanian தேர்தல் ஆணையம் அனாவசியமாக இந்த பிரச்சனையை இழுத்துக்கொண்டிருக்கிறது. சசிகலா பதவியும் செல்லாது, தினகரன் நியமனமும் செல்லாது என்று ஒரு அறிவிப்பு கொடுத்தால் தானாகவே கட்சி இணைந்துவிடும். ஆனால் அப்படி அறிவிக்காததின் காரணம் கட்சி இணையக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் மத்திய அரசின் கையால் யார் குட்டு வாங்க தயாரோ அவரெ அடுத்த முதல் மந்திரி 😭😭
Rate this:
Cancel
Selvan - NY,யூ.எஸ்.ஏ
24-ஏப்-201720:40:58 IST Report Abuse
Selvan தலைமையும் தெளிவும் இல்லா EPS. தெளிவுடன் OPS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X