புதுடில்லி : ''தொன்மையான தமிழ் மொழியை, பிற மாநில மாணவர்கள் கற்கும் வகையில், அந்த மாநில அரசுகள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.
மாநில முதல்வர்கள் பங்கேற்ற, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், பிரதமர் பேசியதாவது: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, 'ஒன்றுபட்ட பாரதம்; ஒப்பற்ற பாரதம்' என்ற, அவரது தாரக மந்திரத்தை, நாம் கையில் எடுக்க வேண்டும். இந்தியா, பன்முகத்தன்மை உடைய நாடாக திகழ்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை பலப்படுத்த, நாம் தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஒரே தேசத்தில் வசித்தாலும், பல நேரங்களில், நாம் அன்னியராக உணர்கிறோம். நமது பாரம்பரியம், கலாசாரம் பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம். மாநிலங்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து, பணியாற்றுவது அவசியம்.
உதாரணத்திற்கு, தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ், வளமையான, தொன்மை வாய்ந்த மொழி. தமிழ் மொழியின் மூலம், இந்தியாவின் வளமையை பறைசாற்றலாம். ஆனால், தமிழ் மொழியை பற்றி, பல மாநிலத்தவர் அறிந்து கொள்ளாமல் உள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ் பாடல்களையாவது அல்லது, 100 வார்த்தைகளையாவது, பிற மாநில மாணவர்கள் கற்கலாம். இந்த ஒப்பந்தங்கள் மூலம், தொன்மையான மொழியின் எழுத்துக்களை,
மாணவர்கள் அறிய முடியும்.எனவே, தமிழக அரசுடன் மற்ற மாநிலங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யலாம்;
தமிழக மாணவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம்; தமிழகத்திற்கு, மாணவர்களை சுற்றுலாவுக்கு அனுப்பலாம்.
குஜராத் - சத்தீஸ்கர், தெலுங்கானா - ஹரியானா போன்ற, மேலும் சில மாநிலங்கள், இதுபோன்ற ஒப்பந்தங்களை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், ஒன்றுக்கொன்று வித்தியாசமான மாநிலங்கள் ஏராளமாக உள்ளன. இவை, ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். வேற்றுமைகள் நிறைந்த, நம் தேசத்திற்கு, இம்முயற்சி அவசியம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (129)
Reply
Reply
Reply