அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு தடைபட்டது ஏன்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு தடைபட்டது ஏன்

அ.தி.மு.க., பொதுச் செயலரின் அதிகாரத்தை குறைத்து, அப்பதவியை பன்னீர் அணிக்கு ஒதுக்கும் முடிவால், இரு அணிகள் இணைப்பு பேச்சு, நேற்று தடைபட்டது.

 இணைப்பு பேச்சு, தடை, ஏன்



முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரு குழுக்களும், நேற்று, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பேச்சு நடத்த திட்டமிட்டன.

அவசர ஆலோசனை


அதன் காரணமாக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை, 11:45 மணிக்கு, முதல்வர் பழனிசாமி வந்தார். அவரை தொடர்ந்து, அமைச்சர்கள், ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களும் வந்தனர். பன்னீர் அணி குழுவினர் வரவில்லை.

அமைச்சர்களுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில், போயஸ் கார்டன், வீனஸ் காலனியில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், அவரது தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், கே.பி.முனுசாமி,விஸ்வநாதன், செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், 'சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும், கட்சியை விட்டு நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். இரு கோரிக்கைகளையும் ஏற்றால் தான் பேச்சு' என, அறிவித்தனர்.

அதிகாரப்பூர்வ பேச்சுக்கு முன்வரவில்லை.


இந்த தகவல், பழனிசாமி அணிக்கு தெரிய வந்ததும், அவர்கள் சார்பில், வைத்திலிங்கம் பேட்டி அளித்தார். 'நீதிமன்றம் உத்தரவிட்டால், சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு தயார். தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், சசிகலா நீக்கம் பற்றி முடிவெடுக்கலாம்'என்றார். இப்படி இரு அணியினரும் பேட்டி அளித்தனரே தவிர, அதிகாரப்பூர்வ பேச்சுக்கு முன்வரவில்லை.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பழனிசாமி தரப்பில், பாண்டியராஜன், செம்மலைக்கு, அமைச்சர் பதவி அளிக்க, பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது.

Advertisement

ஆனால், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்கின்றனர்.
பொதுச் செயலர் பதவியை, பன்னீருக்கு வழங்க தயார் என, கூறியுள்ளனர். ஆனால், பொதுச் செயலர் பதவிக்குரிய முழு அதிகாரம் தர முடியாது என, நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுச் செயலர் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில், கட்சியின் சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என, பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதற்கு, பன்னீர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்; பொதுச் செயலருக்கு தான், முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்கின்றனர். இந்த விவகாரத்தால் தான், நேற்று இரு அணிகளின் பேச்சு துவங்கவில்லை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25-ஏப்-201723:13:31 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"முதல்வர் பதவி வெறி" யாருக்குன்னு சொல்லலாமுல்லெ.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25-ஏப்-201723:12:56 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்'நீதிமன்றம் உத்தரவிட்டால், சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு தயார். தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், சசிகலா நீக்கம் பற்றி முடிவெடுக்கலாம்'என்றார். -

Rate this:
Balaji - Khaithan,குவைத்
25-ஏப்-201718:25:43 IST Report Abuse

Balajiபதவிக்குத்தான் அவ்வளவும் நடந்துகொண்டு இருக்கிறதே ஒழிய மக்களின் நலன் என்பதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது..........

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X