பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம் | பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம்| Dinamalar

பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம்

Added : ஏப் 25, 2017 | கருத்துகள் (101)
Advertisement
பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம், Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை

புதுடில்லி : 'பசு மாடுகள் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு, 'ஆதார்' எண் போன்ற, அடையாள எண் வழங்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

உ.பி., குஜராத் உட்பட பல மாநிலங்களில், சமீபத்தில், பசு மாடுகளை கடத்தி கொன்றதாக பலர் மீது தாக்குதல் நடந்தது; இதை தொடர்ந்து, பசு பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்தது.

இந்நிலையில், 'நாள்தோறும் ஆயிரக்கணக்கான பசுக்கள், வங்கதேசத்திற்கு கடத்தி செல்லப்பட்டு, கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி, அகில பாரத பசு பாதுகாப்பு இயக்கம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம்நியமித்த, கமிட்டியின் பரிந்துரைகள், மத்திய அரசின்சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்டன.

அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது:பசுக்கள் கடத்தப்படுவதை தவிர்க்க, அதன் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்கள் தேவை. ஆதார் எண்ணை போல, அதற்கென தனியான அடையாள எண்ணை உருவாக்கலாம்; அதில் மாடுகளின் வயது, பாலினம், வகை, இருக்கும் இடம், எடை, நிறம், வால், தனிப்பட்ட அடையாளம் போன்ற விபரங்களை பதிவு செய்யலாம். இதன் மூலம், பசு பாதுகாப்புடன், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை உற்பத்தியை பெருக்கவும் முடியும்.

இது மட்டுமின்றி, கைவிடப்பட்ட பசு மாடுகளை பாதுகாப்பது மாநில அரசுகளின் கடமை; இதற்காக மாவட்டங்கள் தோறும், 500 பசு மாடுகளை பாதுகாக்கும் வகையில், கூடம் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
25-ஏப்-201723:17:08 IST Report Abuse
Vetri Vel ஒரு சில ஆயிரம் கோடி காண்ட்ராக்ட் ரெடி ஆகிட்டு இருக்கு.... ஜெட்லீ 40 பெர்சென்ட் சுடுவதுக்குக்கு அடுத்த திட்டம் தயார்... கங்கை சுத்தமாக்கும் திட்டம் போல .. 60 வருசத்துல எவனோ கொள்ளை அடிச்சான்னு பேசி பேசியே.. இந்த கொள்ளை கூட்டம் 6 வருசத்துல... பல மடங்கு அடிக்குது.. வோட்டு போட்ட மக்களுக்கு ..
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
25-ஏப்-201718:43:59 IST Report Abuse
unmaiyai solren அண்ணாமலை ஜெயராமா நீ முதலில் மனித இனத்தை பற்றியும், அவர்களுக்கு தினம், தினம் நடக்கும் கொடுமைகளை பற்றியும் சிந்திப்பவன் தானா?? நீ எப்போதும் மாட்டை பற்றி மட்டும்தான் கவலைப்படுவியோ? அப்போ நீ மாட்டோடு போய் ஐக்கியமாயிடு.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
25-ஏப்-201718:08:22 IST Report Abuse
Karuthukirukkan அடடே மாபெரும் திட்டம் .. இதை கண்டிப்பா அமல்படுத்த வேண்டும் .. அமல்படுத்தினால் இது ஒன்னு தான் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களில் இருந்து பிஜேபி மாறுபட்டு செய்த முதல் திட்டமா இருக்கும் .. என்னே சிந்தனை .. அப்பிடியே ஒரு அறிவாளி ஜெயராமன் மாட்ட காப்பாத்துன தான் இயற்கையை காப்பாத்த முடியும்னு வழக்கம் போல உளறிட்டு இருக்காரு .. இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கணக்கெடுப்பில் அதிகரிச்சிட்டு தான் போகுது அறிவாளியே .. இன்னொன்னு வயசான மாட்டை வித்தா தான் விவசாயி வாழ முடியும் ,, பால் கறக்காத மாட்டை வெச்சு சோறு போடணும்னா அரச மானியம் கொடுக்க சொல்லுங்கப்பா அருமையா வளர்த்துட்டு போயிருவோம் .. சும்மா சாகிற மாடு எவன் வயித்துக்குள்ள போனா என்ன ?? அதுல சில கோடி பேருக்கு வயித்துக்கு உணவு , சில கோடி விவசாயிக்கு பொருளாதார பயன் .. வெள்ளை புரட்சி நடக்கணும்னா , பிங்க் புரட்சி நடந்தே தீரனும் என்ற அறிவு எந்த மாட்டு மூளைக்கு கிடையாது ..
Rate this:
Share this comment
26-ஏப்-201701:11:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்40 வருடத்திற்கு முன்பு 1000 பேர் வசித்த கிராமத்தில் 2000 மாடுகள் இருந்தன இன்று 1000 பேர் வசிக்கும் கிராமத்தில் 100 மாடுகள் கூட இல்லை. நகரத்தில் உட்கார்ந்துகொண்டு கறியை வறுத்து தின்று கொண்டிருந்தால் நாட்டு நடப்பு எப்படி தெரியும்....
Rate this:
Share this comment
26-ஏப்-201701:13:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்மாடு தன்னுடைய தொண்ணுறு சதவிகித ஆயுளுக்கும் பால் கறக்கிறது, அதற்கு பிறகும் அது போடும் சாணி உரம் தான். மாடு என்றுமே மனிதனுக்கு பாரம் இல்லை. மனிதன் தான் தன் சுயநலத்திற்கு மற்ற உயிர்களை பலிகொடுக்கிறான்....
Rate this:
Share this comment
Rahim - Jubail,சவுதி அரேபியா
26-ஏப்-201712:03:34 IST Report Abuse
Rahimமாட்டை அறுத்து விற்று காசு பார்ப்பது VHP மற்றும் சங்க பரிவார கூட்டம் தான் எனவே அங்கு கொண்டு போய் கொட்டும் உங்க தத்துவத்தை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X