சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

3டி கண்ணாடி அச்சியந்திரம்

Added : ஏப் 27, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
3டி கண்ணாடி அச்சியந்திரம்

கண்ணாடியை பயன்படுத்தி, வேண்டிய பொருட்களை வடிவமைக்க உதவும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தை, முதல் முறையாக ஜெர்மனியிலுள்ள கார்ல்ஸ்ருஹே தொழில்நுட்ப நிலையம் உருவாக்கி இருக்கிறது.புதிய பொருட்களை வடிவமைப்பதற்கு உதவும் முப்பரிமாண அச்சியந்திரங்களுக்கு மூலப் பொருளாக, பீங்கான், பாலித்தீன், பலவித உலோகங்களை பயன்படுத்துவது வழக்கம். மருத்துவத் துறையில் திசுக்களை உருவாக்க உயிரிப் பொருட்களைக் கூட பயன்படுத்த ஆரம்பித்துஉள்ளனர்.ஆனால், கண்ணாடியை பயன்படுத்துவது சவாலானதாக இருந்து வந்தது. கார்ல்ஷுஹேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், துாய்மையான குவார்ட்ஸ், திரவ பாலிமர் ஆகிய இரண்டையும் கலந்து கண்ணாடிப் பொருட்களை உருவாக்கி இருக்கின்றனர்.
இந்தக் கலவையை முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, மிகச் சிறிய கண்ணாடிப் பொருள் முதல், நுட்பமான வேலைப்பாடுள்ள பொருட்கள் வரை, சில மணி நேரத்தில், அச்சிட்டு எடுத்துவிட முடியும்.இந்த அச்சியந்திரத்தால் நுகர் பொருட்களை மட்டுமல்ல, ஒளியைப் பயன்படுத்தும் கணினி
களுக்கான பாகங்களைக்கூட துல்லியமாகத் தயாரித்துத் தர முடியும் என, கார்ல்ஷுஹேயின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
27-ஏப்-201706:05:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் // கணினி களுக்கான பாகங்களைக்கூட துல்லியமாகத் தயாரித்துத் தர முடியும்// சபாஷ், இந்த இயந்திரம் தன்னுடைய அடுத்த மாடலை தானே தயாரித்து கொண்டு விடலாம் போலிருக்கே.. பேஷ், பேஷ்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X