அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., டிரைவர் மரணம் விபத்தா, கொலையா
விசாரணையில் திரை விலகுமா

முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில், தேடப்பட்டு வந்த எஸ்டேட் டிரைவர் நேற்று, ஆத்துாரில் நடந்த விபத்தில் இறந்தார். இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெ.,டிரைவர்,மரணம்,விபத்தா,கொலையா,விசாரணை,திரை விலகுமா

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ், 36. இவர், 2009ல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு கார் டிரைவராக கொடாநாடு எஸ்டேட்டில் பணி யாற்றி வந்தார்.கடந்த, 2012ல், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 2014ல், வட பழனியை சேர்ந்த, கலைவாணி, 23, என்பவரை காதல் திருமணம் செய்தார். இதில், ஒன்றை வயதில் பெண் குழந்தை உள்ளது.

அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கிய இவர், வாடகைக்கு கார் ஓட்டி வந்துள்ளார்.இரு தினங்களுக்கு முன், இடைப்பாடிக்கு மனைவி, குழந்தைகளுடன் வந்தார். நேற்று முன்தினம், மதியம், 2:00 மணிக்கு, 'இண்டிகா' காரில், ஆத்துாருக்கு, சித்தப்பா மகளுக்கு பிறந்த

குழந்தையை பார்க்க வந்தார். மாலை, 6:00 மணிக்கு, நண்பர் ரமேஷ் என்பவருடன், காரில் காட்டுக்கோட்டை தாபா ஓட்டலில் சாப்பிட்டுள்ள னர். இரவு, 9:00 மணியளவில், ரமேஷின் நண்பர் விஜி என்பவர் வைத்திருந்த, 'ஹீரோ' பைக்கில், ஆத்துார் புறவழிச்சாலை வழியாக சென்றார்.

ஆத்துார், சந்தனகிரி புறவழிச்சாலை பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, பெங்களூருவில் இருந்து, பெரம்பலுார் நோக்கி வந்த, 'போர்டு - பிகோ' கார், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த கனகராஜை, ஆத்துார் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த கனகராஜ், ஜெயலலிதா தோட்டத்தில் கார் டிரைவராக இருந்தது தெரியவந்ததால், 'மேலிடத்துக்கு' போலீசார் தகவல் அளித்தனர். விபத்து குறித்து, ஆத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இவரது சாவில் மர்மம் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இறந்து, 17 மணி நேரத்துக்கு மேலாகியும், போலீசார் பிரேத பரிசோதனை செய்வதற்கு, மருத்துவமனைக்கு கடிதம் வழங்காததால், தாமதம் செய்வதற்கான காரணம் கேட்டு, கனகராஜியின் சகோதரர் தனபால் உள்ளிட்ட உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

கார் டிரைவர் கைது:


பெரம்பலுாரை சேர்ந்த பிச்சைமணியின் மனைவி மல்லிகா, 40, மாமியார், இரு குழந்தைகளுடன், பெங்களூருவில் இருந்து, 'போர்டு - பிகோ' காரில் பெரம்பலுாருக்கு வந்தனர். கார் ஓட்டி வந்த,

Advertisement

தம்மம்பட்டி டிரைவர் ரபீக், 27, பைக் மீது மோதியதும் காரினுள் இருந்த ஏர்பேக் வெளி யேறியதால், காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர். விபத்து வழக்கில், கார் டிரைவர் ரபீக் என்பவரை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார், விபத்தில் இறந்த கனகராஜ், தேடப்படும் குற்றவாளியா என உறுதிப்படுத்த வந்தனர்.
அவர்கள், இறந்த கனகராஜின் உடலில், ரத்த காயம் விபத்தில் ஏற்பட்டதுதானா அல்லது வேறு ஏதாவது காயம் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

கோடநாடு எஸ்டேட்டில் வேலை செய்த கனகராஜின் நண்பர் சயான் என்பவரும், நேற்று கேரள மாநிலம், பாலக்காடு அருகே, நடந்த விபத்தில் காயமடைந்தார். இதனால், ஆத் துாரில் தனிப்படை போலீசார்கள் முகாமிட்டு, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மர்ம கும்பல் விரட்டியதா


கோடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜ், நேற்று, நீதிமன்றத் தில் சரணடைய இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் பைக்கில் புறப்பட்டு சென்று
கொண்டிருந்த போது, அதையறிந்த மர்ம கும்பல், கனகராஜியின் பைக்கை விரட்டிச்
சென்றுள்ளது. அப்போது அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மற்றொரு தகவலும், காட்டு தீ போல் பரவி வருகிறது... கனகராஜை கொலை செய்த மர்ம கும்பல், அவரது உடலை காரில் கொண்டு வந்து, வீசி விட்டு, விபத்து ஏற்படுத்தி யது போல் நாடகம் ஆடுவதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஏப்-201716:23:35 IST Report Abuse

Endrum Indianவிபத்து போல் தெரிய வைக்கும் கொலை

Rate this:
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
30-ஏப்-201714:41:53 IST Report Abuse

நெல்லை மணி,பணம் என்கிற அரக்கன் மனிதர்களை கொலை செய்கிறான்.

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
30-ஏப்-201714:28:01 IST Report Abuse

Shanuஎல்லா குற்றத்திற்கும் மன்னிப்பு உண்டு கொலை குற்றத்தை தவிர. கொலை செய்தால் கடவுள் மிக பெரிய தண்டனை தருவார். கொலை செய்தவர்கள் குடும்பம் அழிந்து விடும்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X