விக்கிபீடியாவுக்கு துருக்கியில் தடை

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (2)
Share
Advertisement
துருக்கி, விக்கிப்பீடியா, தடை, பயங்கரவாதம்

அங்காரா : விக்கிபீடியா இணையதளத்திற்கு துருக்கி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.


விக்கிபீடியாவுக்கு தடை :


விக்கிபீடியா இணையதளம், சர்வதேச அரங்கில் துருக்கிக்கு எதிரான தகவல்களை வெளியிட்டு வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி உள்ளது. மேலும் விக்கிபீடியா இணையதளத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருவதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.


பயங்கரவாதத்திற்கு ஆதரவு :


பயங்கரவாத ஆதரவு கருத்துக்களை நீக்கும்படி விக்கிபீடியாவை துருக்கி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், துருக்கி அரசின் கோரிக்கைகளை விக்கிபீடியா நிராகரித்தது. இதுனையடுத்து விக்கிபீடியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டில் இது புதிது இல்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு கண்காணிப்பு குழு அவ்வப்போது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் முடக்கி வருகிறது. ஆனால் துருக்கி அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, சர்ச்சைக்குரிய வாசகங்களை நீக்கும்படி டுவிட்டருக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை துருக்கியில் இருந்து வந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Johor,மலேஷியா
30-ஏப்-201717:04:05 IST Report Abuse
Siva ஆமாமா இதெல்லாம் இருந்ததா மக்களெல்லாம் புத்திசாலிகளாகிவிடுவர் அதனால் இதெல்லாம் முடுக்கிவிடவேண்டும்
Rate this:
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
30-ஏப்-201712:09:53 IST Report Abuse
CHANDRA GUPTHAN நல்ல நாள்லயே அதிக புத்திசாலிகள். எல்லாத்தையும் முடக்குங்கடா யோக்கிய சிகாமணிகளா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X