விடுமுறையை பயனுள்ளதாக்குங்கள்: மோடி

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (6)
Advertisement
விடுமுறை, மோடி, மான் கி பாத் , MannKiBaat

புதுடில்லி: மாணவ, மாணவியர் விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ மூலம் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது: மான் கி பாத் நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதை உணர முடிகிறது. பலர் எனக்கு பதில் அனுப்பி வருகின்றனர். இவை முழு கவனத்தில் கொள்ளப்படும்.
கோடை காலம் என்பதால் இயற்கை வளங்கள் காக்க வேண்டும். பறவைகளுக்கு உணவு, நீர் வழங்க அனைவரும் முன் வரவேண்டும். உணவு வீணாவதை தடுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதில் இளைஞர்கள் தங்களை முழு அளவில் ஈடுபடுத்தி கொண்டனர். இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

கோடை கால விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும். இந்த காலத்தில் ஏதேனும் புதிய விஷயத்தை கற்று கொள்ள வேண்டும். நீச்சல், மாற்று மொழி கற்றல், ஓவியம் வரைதல் போன்றவை தேர்வு செய்யலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
30-ஏப்-201715:59:41 IST Report Abuse
A. Sivakumar. சூப்பரா சொல்லியிருக்கார். நல்லதைச் சொன்னால், செஞ்சால் பாராட்டத்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
30-ஏப்-201714:40:16 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan அடிக்கற வெய்யிலுக்கு வெளீலயே போக முடியலயாம். வீட்டுக்குள்ள இருந்தாலும் எரிச்சல்ல சண்டைதான் வருது. இதுல எங்கேந்து பயனுள்ளதா மாத்திக்கறது. பேசறதை 4 பேரு கேட்கறான்னு தெரிஞ்ச உடனே கட்டுமரம் மாதிரி குஷியா வெறுப்பேத்தறிங்க தலைவரே.
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
30-ஏப்-201713:28:38 IST Report Abuse
Being Justice நல்ல அறிவுரை. அதே போல் பிறர் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களின் கட்சிக்காரர்களிடமும் கொஞ்சம் சொல்லி வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X