சுஷ்மாவுக்கு கணவர் கொடுத்த சூப்பர் பதிலடி

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (23)
Advertisement
சுஷ்மா ஸ்வராஜ், ஸ்வராஜ் கவுசல், டுவிட்டர், வெளியுறவு துறை அமைச்சர், susma swaraj

புதுடில்லி:வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , டுவிட்டர் இணைய தளம் மூலம், உடனுக்கு உடன் நடவடிக்கை எடுப்பதில் வல்லவர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தால் போதும். சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டு விரைந்து செயல்படுவார். சமீபத்தில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், நாட்டில் உள்ள பெண்கள் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.


வீட்டு வேலை செய்ய வேண்டும்



அப்போது சுஷ்மா சுவராஜ், ' ஒவ்வொரு வீட்டிலும், வீட்டு வேலை செய்ய ஆண்கள் முன்வர வேண்டும். பெண்கள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும். இதற்கு தேசிய மகளிர் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என, சுஷ்மா தெரிவித்து இருந்தார். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் விரிவான செய்தி வெளியானது. இந்த செய்தியை மேற்கோள்காட்டி, சுஷ்மா கணவர் சுவராஜ் கவுசல் தனது டுவிட்டர் பக்கத்தில், ' மோசமான நாட்கள் வருகிறது' என, கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். சுவராஜ் கவுசல், டில்லியில் பிரபலமான கிரிமினல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தன் மனைவி வெளியுறவு துறை அமைச்சராக இருந்தாலும், அவரை பற்றி கிண்டலாக கவுசல் கருத்துக்கள் வெளியிடுவது சகஜமான ஒன்று தான். ஆனால், அதை சுஷ்மா ஸ்வராஜ் பெரியதாக எடுத்துக் கொள்வது இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
01-மே-201700:54:30 IST Report Abuse
Manian இதுதான் இல்லற வழியில் சுவையூட்டும் துளிகள். இதில் நகைசுவை காண்பவர்கள், என்றும் அன்போடு இருப்பார்கள். என் மனைவி ஒரு நாள் என்னிடம் சொன்னால். நீங்க நல்ல காபி பொடிவீங்கன்னு என்னைக்கோ சின்னத்தை வச்சுகிடு காபி குடிகார வேளையிலே ஒங்க வீடு பட்டாள்ளமே வருக்குதே என்று சொன்னால். பயப்படாதே, எலிப்பொறி தயாராகுது என்றேன் . அது என்ன கூத்து என்றால். இது பாரு, இந்த வடட மேசைக்கு அடியிலே ஆறு தையல் மிஷின் மிதியடி பட்டை வைக்கப்போறேன். அதிலிருந்து ஒரு பெல்ட்டு மேலே இருக்குற மோட்டர்லே பெல்ட் மூலம் இணைக்கபோறேன்.காபி குடிக்க வரவனுக அந்த கிஷன் மீடியாடியிலே காலே வசை ஒடனே அது மேலயும் கீழேயும் போகும். காலை எடுக்க விடாது. என்ன நகாடுதுன்னு கேப்பாங்க. ஒண்ணுமில்லே, மேலே மொட்ட்ற முள்ளம் மின்சாரம் தயாராகுது. அதிலிருந்து தான் காபி மிஷின் கொடடை அரைச்சு,காபி போடும். ஒரு 15 நிமிஷம் பொறுங்க காபி தயாராய்டும். குடிகூடு போலாம். அப்புறம் பாரு இந்த பாகம் நெஜமாவே காபி சாபிடவாருங்கான, காலாட்டி, மிஷின் ஒட்டி, காபி குடிக்க வரமாட்டானுங்க. என்ன சையேன்னேன். கீழே விழுந்து புரண்டு சிரித்து போதும், போதும் நிறுத்துங்க என்று சொன்னால். இது மாதிரி கேலியாக பேசுவதை அவள் ரசிப்பாள். நல்ல காலம், அவ்வையாரின் "ஆடினால், பாடினால், பழ முறத்தால் சாடினால் " ராகம் இல்லை. இன்றும் நான் அனுபவித்து சமைப்பதை ஆதரிக்கிறாள். அமெய்ப்பிற்கா போன்ற நாடுகளில் வீட்டுவேலையை , மெதுவாக இந்தியர்களும் paகிர்ந்து கொள்கிரார்கள்ளர ம். சதவிகிதம் கம்மிதான். ஆகவே சண்டைகள் குறைவே. - அனுபவம் பேசுகிறது.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஏப்-201722:42:05 IST Report Abuse
மலரின் மகள்கள் /// பிரபலமான கிரிமினல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்/// அப்படி என்றால் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது அரசு.
Rate this:
Share this comment
Cancel
Sha Shank Shankar - Chennai,இந்தியா
30-ஏப்-201721:07:26 IST Report Abuse
Sha Shank Shankar இவர்கள் அல்லவோ நல்ல தம்பதிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X