பொது செய்தி

இந்தியா

கூட்டம் அலை மோதும் விசா கோவில்

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (10)
Advertisement
விசா, கோவில், ஐதராபாத், அமெரிக்கா, எச் - 1 பி விசா, டிரம்ப், மூட நம்பிக்கை

ஐதராபாத்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், எச் - 1பி விசாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து விடுபட வேண்டி, ஐதராபாத்தில் உள்ள விசா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.


500 ஆண்டுகள் பழமையானது

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் சில்கூர் பாலாஜி கோவில் என்ற பெருமாள் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், 1980ம் ஆண்டு முதல், விசா உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் சக்தி உள்ள கோவிலாக கருதப்படுகிறது. எனவே இந்த கோவிலை, விசா கோவில் என்றே அழைக்கின்றனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ரீகாந்த் அங்கிரிகுலா என்பவர், அமெரிக்க விசா பெற பல முறை அலைந்தவர். இந்த கோவிலுக்கு வந்த பிறகு தான் அவருக்கு சமீபத்தில் விசா கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், '' இது ஒரு அதிசயம் தான். இரண்டு ஆண்டுகளாக எனக்கு விசா கிடைக்கவில்லை. இந்த கோவிலுக்கு வந்த பிறகு அனைத்தும் சுமூகமாக நடக்க தொடங்கி உள்ளன. நான் மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல. இருப்பினும், கடவுள் அனுகிரகம் இருக்கிறது,'' என்றார்.


ஒரு லட்சம் பக்தர்கள்


இந்த கோவிலுக்கு வாரம் தோறும், ஒரு லட்சம் பக்தர்கள் வருகின்றனர். பெருமாள் காலடியில் பாஸ்போர்ட்களை வைத்து வணங்கி செல்கின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேற, கோவிலை 11 முறை வலம் வருகின்றனர். விருப்பம் நிறைவேறிய பிறகு, 108 முறை கோவிலை வலம் வருவது கட்டாயம் என கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venguswamy Gopalakrishnan - chennai,இந்தியா
30-ஏப்-201723:20:15 IST Report Abuse
Venguswamy Gopalakrishnan திரு குப்புஸ்வாமி கேசவன் சொல்வதை தான் நான் நம்புகிறேன். உலகத்தின் நடக்கும் எல்லாவிஷயங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் நடைபெறுகின்றது .
Rate this:
Share this comment
Cancel
Sha Shank Shankar - Chennai,இந்தியா
30-ஏப்-201723:00:24 IST Report Abuse
Sha Shank Shankar தேவையான முயற்சியை மேற்கொண்டும் கிடைக்காதவர்கள் தான் மேலும் முயற்சித்துக்கொண்டே இங்கு வருவார்கள். ஆக முயற்சியோடு ஆண்டவன் அனுகிரகமும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இங்கு செல்வதில் தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel
venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ
30-ஏப்-201720:55:58 IST Report Abuse
venkatasubramani இது ஒரு மிக அதிசயமான கோயில். எனது அலுவலகத்தில் அமெரிக்கா செல்ல, இன்னின்ன தகுதியுடைய ஒருவருக்கு அழைப்பு விடுக்க பட்டது. நான் விண்ணப்பித்தேன். ஆனால் என்னுடைய மேலாளர் நேரடியாக என்னை அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். இது நடந்த ஒரு மதத்திற்கு பிறகு, இந்த கோயிலுக்கு நான் செல்ல நேர்ந்தது. என் குடும்பத்தினர் என்னை வற்புறுத்தி முதல் வேண்டுதலுக்காக 11 சுற்று சுற்ற சொன்னார்கள். நானும் அப்படியே செய்தேன். இது நடந்தது சனி கிழமை. திங்கட்கிழமை, நான் அலுவலகம் சென்றபோது, என்னுடைய மேலாளர் அவசரமாக என்னை தனியாக அழைத்து, உடனடியாக அமெரிக்கா செல்ல நான் தயாரா என்று கேட்டார். அதற்கடுத்த 2 - 3 வாரத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். இதற்கு முழு காரணம் அந்த கோயிலில் நான் செய்த பிரார்த்தனைதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X