அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேலும் ஒரு மாஜி டிரைவர் பலி

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (24)
Advertisement
ராம் மோகன் ராவ், முன்னாள் டிரைவர், கோடநாடு, ஜெயலலிதா, கார்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் மர்ம மரணத்தை தொடர்ந்து, முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவின் முன்னாள் கார் டிரைவரும் விபத்தில் உயிர் இழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே கார் மோதி பலியானார். ஆனால், அவரது விபத்தில் சந்தேகம் உள்ளது என அவரது சகோதரர் குற்றம் சாட்டி உள்ளார். காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சயான் என்பவர், கேரள மாநிலம், பாலகாடு அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.

வருமான வரித்துறையினர் சோதனையால், தலைமை செயலாளர் பதவியை இழந்த ராம் மோகன் ராவின் முன்னாள் கார் டிரைவர் ரவிச்சந்திரன். இவர் பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கார் ஓட்டி உள்ளார். ராம் மோகன் ராவ் கார் டிரைவராக, மூன்று மாதம் பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஒரு பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கார் ஓட்டி வருகிறார்.


சென்னையில் விபத்து

சென்னை, தாம்பரம் - முடிச்சூர் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு ரவிச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தனியார் வாகனம் மோதி இறந்துள்ளார். பிரபலங்களிடம் கார் டிரைவர்களாக பணியாற்றி வந்தவர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
@a_Vailankanni - Mumbai ,இந்தியா
01-மே-201710:22:08 IST Report Abuse
@a_Vailankanni என்ன நடக்கிறது தமிழ் நாட்டில் எதாவது சினிமா சூட்டிங்கு ஏதாவது நடக்கிறதா இல்லை நிசமாகவே இப்படிப்பட்ட விபத்துக்கள் வேண்டுமென்றே நடத்தப்படுகிறதா நுணிகிளையில் உட்கார்ந்து கொண்டு அடி கிளையை வெட்ட அவர்களே விழுந்து மாட்டிக்கொள்கிறார்கள் ஒன்னு மட்டும் கண்டிப்பா தெரியிது ஜெ.ஜெ. வோட ஆத்மா இப்போதான் சரியா வேலை பண்றா மாதிரி தோணுது உண்மையா பொய்யா?
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
01-மே-201701:00:12 IST Report Abuse
Vasanth Saminathan தமிழக காவல்துறையின் மூஞ்சியில் எல்லாரும் காறி உமிழுங்கள். அதிகாரத்தில் இருக்கும் ஊழல்வாதிகளை பிடிக்கமாட்டார்கள். டாஸ்மாக்குக்கு எதிராகவும் ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களையும் மட்டுமே பந்தாடுவார்கள். சசிகலா மற்றும் கூட்டாளிகளின் பினாமி பணம், ரகசியங்கள் அவர்களிடம் கொடுத்துவைக்கப்பட்டிருக்கும். மத்திய அரசு நோண்டுவதால் தப்பிக்கவே இத்தகைய விபத்துக்கொலைகள். தயவு செய்து அரசை கலைக்கவும். மறு தேர்தல் கூட வேண்டாம். ஜனாதிபதியே ஆட்சி செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
01-மே-201700:56:12 IST Report Abuse
Vasanth Saminathan ஆத்தி ஜெவின் ஆன்மா மிகுந்த சக்திவாய்ந்தது போலருக்கே. கொடூரமா பழிவாங்குது. எல்லாரையும் போட்டு தள்ளு தாயே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X