அரசியல் செய்தி

தமிழ்நாடு

காட்டி கொடுத்த சுகேஷ் மொபைல் போன்

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (20)
Advertisement
தினகரன், டில்லி, குற்றப்பிரிவு போலீசார், சுகேஷ், மொபைல் போன், ஆடிட்டர், தேர்தல் ஆணையம், மூத்த அதிகாரி

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் மொபைல் போனை, டில்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைப்பற்றி உள்ளனர்.

இந்த வழக்கில் கைதான தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை சென்னைக்கு அழைத்து வந்து டில்லி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் சுகேஷ் சந்திரசேகரின் மொபைல் போனை கைப்பற்றியுள்ளனர். மேலும், தினகரன், சுகேஷ் இடையேயான போன் உரையாடல் ஆதாரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். தினகரன் சென்னை ஸ்டேட் வங்கியில் வைத்து இருந்த ஐந்து வங்கி கணக்குகளையும் டில்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த வங்கி கணக்குகளில் பெரிய அளவில் பண பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தினகரனின் ஆடிட்டரிடமும் விசாரணை நடத்த டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவரிடம் சுகேஷ் சந்திரசேகருக்கு தொடர்பு இருந்துள்ளது. அவரிடமும் விசாரணை நடக்கலாம் என தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
01-மே-201716:02:00 IST Report Abuse
GUNAVENDHAN சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பரபரப்பான அறிவிப்புகளை செய்து மேலிடத்தின் வறுபுறுத்தலுக்கினாங்க தினகரனை கைதும் செய்தாகி விட்டது, இன்னமும் ஆதாரங்களை தேடித்தேடி அலைகிறது டில்லி போலீஸ் . இப்போதைக்கு டில்லி தலைமையின் எண்ணமே , தினகரனை செயல்படுவதில் இருந்து தடுத்து, பன்னீருக்கு தேவையான அளவுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஒன்றே குறிக்கோளாக உள்ளது . ஆனால் என்னதான் மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி பி ஐ , டில்லி போலீஸ் எல்லாவற்றையும் பன்னீரை கைத்தூக்கிவிட பயன்படுத்தினாலும் அவர்கள் நினைத்த அளவுக்கு பன்னீரால் கட்சியை உடைத்திட முடியவில்லை .
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
01-மே-201700:53:30 IST Report Abuse
Vasanth Saminathan தமிழக தேர்தல் ஆணையர் லக்கானி மீதும் ரொம்ப நாளா ஒரு டவுட். உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது, தினகரன் மனுவை ஏற்றுக்கொண்டது, பணம் கைமாறியது தெரிந்தும் தேர்தலை நடத்தவே முயற்சி செய்தது. அந்த ஆளை முதலில் விசாரியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
30-ஏப்-201719:15:23 IST Report Abuse
Swaminathan Chandramouli என்னதான் சிபிஐ கையில் தினகரன் சிக்கினாலும் சிபிஐ நீதி மன்றத்தில் ஒரு நீதியரசர் இருக்கிறார் அவர் தினகரனையும் விடுவித்து இன்னொரு கல்லாவையும் நிரப்பிவிடுவார் அவர் தான் ஓ பி சைனி கூடிய சீக்கிரம் அவர் ஓய்வு பெறப்போகிறார் . எரிகிற வீட்டில் சுருட்டினது லாபம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X