அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் அறிவிப்பால் மா.செ.,க்கள் கலக்கம்

Updated : மே 02, 2017 | Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (31)
Advertisement
ஸ்டாலின், செயல் தலைவர், மாவட்ட செயலாளர்கள், தேர்தல், dmk, Stalin, தி.மு.க.,

எந்த நேரத்திலும், தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரலாம்; நாம் அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்' என, தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்த தகவலால், மாவட்டச் செயலாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அதீத நம்பிக்கை


இது குறித்து, தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் சிலர் கூறியதாவது:


தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரக் கூடிய நிலை தான் உள்ளது. இந்த யதார்த்தம் தி.மு.க.,வினர் அனைவருக்கும் புரிகிறது. ஆனால், ஒரு ஆண்டுக்குள் மீண்டும் சட்டசபை தேர்தல் என்ற போது, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என எல்லோரும் தயக்கமாக உள்ளனர். ஓராண்டுக்குள் மீண்டும் தேர்தலுக்காக செலவு செய்ய வேண்டுமா என்ற தயக்கம் உள்ளது. அதனால், யாரும் தேர்தலை விரும்பவில்லை.

இந்த யதார்த்தத்தை ஸ்டாலினும் உணர்ந்திருக்கிறார். ஆனாலும், அவர் தேர்தலை விரும்புகிறார். ஆளும் தரப்புக்கு நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்து, தேர்தலை வரவழைக்க வேண்டும் என்கிறார். 'இம்முறை தேர்தலுக்கு, தி.மு.க., தரப்பில் யாரும் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை; செலவு செய்யாமலேயே, நாம், 190க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று விடுவோம்' என்று சொல்லி, அதீத நம்பிக்கையில் இருக்கிறார். நம்பிக்கையை கேள்வி கேட்டு அல்லது சந்தேகப்பட்டு, அவரது எண்ணத்தை சிதைக்க விரும்பவில்லை. ஆனால், தேர்தல் என்றாலே பணம் தான் என்பதை அவர் புரிந்து கொள்ளாமல், எங்களை தேர்தல் களத்தில் நிறுத்தி, பணத்தை தாறுமாறாக செலவு செய்ய வைத்து விடுவாரோ என்ற கவலை இருக்கிறது. அதனால்தான், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது தேர்தல் வேண்டாம் என நினைக்கிறோம். அதைச் சொன்னால், ஸ்டாலின் ஏற்காமல், சொல்கிறவர்கள் மீது கோபப்படுகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
01-மே-201721:41:50 IST Report Abuse
Barathan அப்படியே அண்ணாதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், உடனே ஜனாதிபதி ஆட்சி தமிழ் நாட்டில் அமுல்படுத்த படும். உடனே சட்டசபை தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பிஜேபி அரசு வழி செய்யாது. அப்படியே தேர்தல் வந்தாலும் மறுபடியும் திமுக காங்கிரசை கூட்டு சேர்த்தால் திமுக தோல்வியே அடையும் 2016 இன் சட்டசபை தேர்தல் போன்று.
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
01-மே-201719:15:48 IST Report Abuse
Gopalakrishnan வரும் 3 தேதி ...அஞ்சாங்கிளாஸ் பெயில் ஆன அந்த 2G திருடன் பலநாட்கள் கழித்து பேசப்போகிறான் என்று திமுக காரன் உதார் விடுகிறான் ....கீரிக்கு பாம்புக்கும் சண்டை உடப்போறேன் என்று சொல்லி சொல்லி நம்ப குடுகுடுப்பை காரன் உதார் விடுவதை காட்டிலும் மோசம்தான் போங்கோ ...
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
01-மே-201713:52:44 IST Report Abuse
Devanand Louis ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வார்த்தையை சொல்லி உளறிக்கொண்டு தான் இருக்கிறார் ஆனால் இவரால் முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X