பொது செய்தி

இந்தியா

இனி பெட்ரோல், டீசலுக்கு வேலையில்லை

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (50)
Advertisement
பெட்ரோல், டீசல், எலக்ட்ரானிக் வாகனங்கள், நியூஷ் கோயல்

புதுடில்லி : பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதற்கு பதிலாக அனைத்து வாகனங்களையும் மின்சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்காகவும், வாகனங்களை இயக்குவதற்கான செலவை குறைக்கவும் அனைத்து வாகனங்களையும் மின் சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2030 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களையும் எலக்ட்ரானிக் வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ம் ஆண்டில் ஒரு டீசல், பெட்ரோல் வாகனம் கூட விற்பனை செய்யப்பட கூடாது என்ற அளவில் மாற்ற ஐடியா உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதன் முன்னோட்டமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலக்ட்ரானிக் வாகனங்களை தயாரிக்க உதவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக கொள்கைளும் நிதி ஆயோக் மூலம் வகுக்கப்பட்டு வருகிறது. மக்கள் விரும்பும் வகையில், குறைந்த விலையில் எலக்ட்ரானிக் வாகனங்கள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabaharan - nagercoil,இந்தியா
01-மே-201702:02:19 IST Report Abuse
Prabaharan நம் நாட்டின் அதிகமான அந்நிய செலாவணி இந்த எரிபொருளுக்காக தான் செலவாகிறது. இது மட்டும் நடந்தால் ரூபாயின் மதிப்பு உயரும். காற்று மாசுபடுவது குறையும் .அந்நிய செலாவணி நிறைய மீதமாகும் . நம் நாடு பொருளாதாரத்திற்கு நல்லது . முயற்சி வெற்றிபெறவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
01-மே-201700:42:20 IST Report Abuse
நரி கூடங்குளம் உதயகுமார் போன்றவர்கள் இதற்கு எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-மே-201710:34:35 IST Report Abuse
Sanny அவரின் சண்டித்தனம் குடங்குளத்தில் மட்டும் தான் டில்லியில் எடுபடாது....
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
01-மே-201700:40:18 IST Report Abuse
நரி வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X