அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., சாயம் வெளுத்து விட்டது!'

Added : மே 03, 2017 | கருத்துகள் (28)
Advertisement
'தி.மு.க., சாயம் வெளுத்து விட்டது!'

சென்னை: ''மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், எந்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது,'' என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, தமிழிலும் எழுதலாம் என, தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்றால், நாம் நம் தரத்தை உயர்த்திக் கொள்ள மாட்டோம் என்று பொருள். மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், எந்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது. அதனால், ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தி.மு.க., தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். தமிழர்களை ஏமாற்றுவதற்கும், முட்டாள் ஆக்குவதற்கும், தி.மு.க., பயன்படுத்தும் வார்த்தை, மாநில சுயாட்சி. தி.மு.க.,வின் வேஷம், சாயம் வெளுத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
03-மே-201720:39:21 IST Report Abuse
Mahendran TC நீட் தேர்வு எழுதாவிட்டால் நம் மருத்துவ மாணவர்களின் தரம் உயராதா என்ன? நீட் தேர்வில் வரும் சிலபஸ்/சப்ஜெக்ட்டை ஒன்றும் மருத்துவ மாணவர்கள் ஐந்து வருடம் படிக்கப்போறதில்லையே. பின் எதற்கு நீட் தேர்வு? வடநாட்டு மங்குனி மாணவர்களுக்கு கோச்சிங் என்ற போர்வையில் லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கிக்கொண்டு, ஹிந்தியில் கேள்வித்தாளையும் கொடுத்துவிட்டு (பெரும்பாலான சமயங்களில் கேள்வித்தாள் அவுட் ஆவதும்) தமிழர்களை முட்டாளாக்கும் பாஜகவின் சூழ்ச்சி இது.
Rate this:
Share this comment
Cancel
Sam Rajarajan - Erode,இந்தியா
03-மே-201720:29:38 IST Report Abuse
Sam Rajarajan பொன்னார் அவர்களே தெரிந்து பேசுகிறீர்களா அல்லது தெரியாமல் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை. CBSE பாட திட்டம் கொண்டு தயாரிக்கப்படும் நுழைவு தேர்வு எப்படி இந்தியா முழுமைக்கும் பொருந்தும். மொழி வாரியாக பிரிக்க பட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் தகுதிகேற்றவாறு மருத்துவ படிப்பை தருவதுதான் நல்லது. தமிழகத்தில் உள்ள கிராமங்களில் படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்று யோசித்தீர்களா.
Rate this:
Share this comment
Cancel
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
03-மே-201719:37:52 IST Report Abuse
Saai sundaramurthy. A.V.K பொன் சொல்வது முற்றிலும் உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X