சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேஸ்புக்' நட்பால் சீரழிந்த சிறுமி

Added : மே 03, 2017
Advertisement

திருப்பூர்: திருப்பூர் சிறுமியிடம், புதுச்சேரியில் தவறாக நடந்துக் கொண்ட மற்றொருவனும் கைது செய்யப்பட்டான்.
திருப்பூரில், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி, கடந்த, 27ல் மாயமனார். பெற்றோர் அளித்த புகாரின் படி, வடக்கு போலீசார், சிறுமியை தேடி வந்த நிலையில், 29ல், சிறுமி வீடு திரும்பினார். போலீசாரின் விசாரணையில், 'பேஸ்புக்' மூலம், சிவா என்ற பெயரில் அறிமுகமான, திருப்பூரை சேர்ந்த இப்ராஹிம், சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு அழைத்து சென்று, லாட்ஜில் தங்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து தப்பியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இவன், பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். புதுச்சேரி லாட்ஜில் தங்கியிருந்த போது, சிறுமியிடம் தவறாக நடந்துக் கொண்ட, லாட்ஜ் மேற்பார்வையாளர் பிரபாகரனை பிடிக்க, திருப்பூர் போலீசார், புதுச்சேரி விரைந்தனர்.
குயிலம்பாளையம் பகுதியில் இருந்த பிரபாகரனை, போலீசார் நேற்று கைது செய்து, திருப்பூர் அழைத்து வந்தனர். அவன் மீது, 'போஸ்கோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'அடமானம் வைக்கப்பட்ட சிறுமியின் ஒரு சவரன் நகை மீட்கப்பட்டது. 'சைல்டு லைன்' மூலமாக சிறுமிக்கு 'கவுன்சிலிங்' வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X