அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி., பேரவை ; ஆதரவளிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

Added : மே 05, 2017 | கருத்துகள் (81)
Share
Advertisement
தமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி., பேரவை ; ஆதரவளிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு, TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் தங்கள் கரங்கள் தளர்ந்து விடாமல் இருக்க, தமிழக முழுவதும் உள்ள கட்சியினரைக் கொண்டு, ஆங்காங்கே டி.டி.வி.பேரவையை அமையுங்கள் என, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் கூறியுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும், டி.டி.வி.பேரவை அமைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, அ.தி.மு.க., அம்மா அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலராக இருந்தும் தன்னையும், அத்தை சசிகலாவையும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என கூறி, ஒட்டுமொத்த அமைச்சர்களும் நெருக்கடி கொடுத்ததில், தினகரன் நொறுங்கிப் போய் விட்ட்டார்.

இரட்டை இலையை மீட்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி குற்றப் பிரிவு போலீசார், தினகரனை கைது செய்ததும், அ.தி.மு.க.,வில் இருக்கும் தனக்கான விசுவாசிகள், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையாக கொந்தளிப்பர் என, தினகரன் எதிர்பார்த்தார். ஆனால், விசாரணைக்காக சென்னை அழைத்து வந்த போது கூட, மரியாதைக்குக்கூட யாரும், தன்னை பார்க்கக் கூட விமான நிலையம் வரவில்லை என்று, கடும் வருத்தத்துக்கு உள்ளானார் தினகரன்.

தன்னால் பலன் அடைந்தவர்கள், விமான நிலையத்துக்கு பெரும் திரளாகக் கூடியிருந்தால் கூட, அவருக்கான செல்வாக்கை உணர்ந்து, விசாரணை என்ற பெயரில் போலீசார் என் மீது கடுமை காட்டாமல் இருந்திருப்பர். ஆனால், பெங்களூரு புகழேந்தியும், நாஞ்சில் சம்பத் தவிர வேறு யாரும் வரவில்லை. இதனால், கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்தும், டில்லி போலீஸ் என்னை கொஞ்சம் கூட மரியாதையாக நடத்தவில்லை.

அதனால், நான் யாரையும் வெறுக்கவில்லைகட்சியில் கரங்கள் முழுமையாக தளர்ந்து போனதால்தான், இப்படியெல்லாம், என்னைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் கட்சியின் நிர்வாகிகளும்; தொண்டர்களும் அமைதியாக இருந்து விட்டனர். அதனால், தமிழகம் முழுவதும், எனது பெயரில் பேரவை ஆரம்பித்து, அதை மத்திய அரசுக்கு எதிராக முடுக்கி விடுங்கள்.

இப்படி ஏதாவது, எனக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து, அது மத்திய அரசு கவனத்துக்கு சென்றால் மட்டுமே, நான் வெளியே வர முடியும். அதனால், உடனே அதை செய்யுங்கள் என, தன்னை திஹார் ஜெயிலுக்கு சந்திக்க வந்த ஆதரவாளர்கள் சிலரிடம் தினகரன் கூறியுள்ளார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும், டி.டி.வி.தினகரன் பேரவையை ஆரம்பித்திருக்கும் அ.தி.மு.க.,வினர், தினகரன் கைதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படியொரு போராட்டம்தான், இரண்டு நாட்களுக்கு முன், மதுரையில் நடந்தது.

அதில், அ.தி.மு.க., கர்நாடக மாநில செயலர் புகழேந்தி கலந்து கொண்டு, முழுக்க முழுக்க சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக பேசினார்.அதேபோல, தமிழகம் முழுவதும் டி.டி.வி.பேரவை முளைத்து, அது, தினகரன் கைதுக்கு எதிராக போராடி வருகிறது.

இப்படி செய்யும் போது, மத்திய அரசு நெருக்கடிக்கு அஞ்சி, தன் மீதான வழக்குகளில் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்தாது என, தினகரன் நினைக்கிறார். இந்த பேரவைக்கு, அரசுத் தரப்பில் முழு ஆதரவு கொடுக்கவும், முதல்வர் பழனிச்சாமி தரப்பில் இருந்து உத்தரவு போய் இருப்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது.

இதையெல்லாம் வைத்துத்தான், பழனிச்சாமி கபட நாடகம் ஆடுகிறார் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இவ்வாறு அந்த நிர்வாகிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
08-மே-201711:49:18 IST Report Abuse
kc.ravindran ஜல்லி கட்டு நடத்த பெருங்கூட்டம் கூடி தமிழனின் கலாச்சாரத்தையும் வீர விளையாட்டையும் தலை மேல் தூக்கி ஆடிய இந்த இளைஞ்சர்க்கூட்டத்தில் ஒருத்தன் கூட இதை வாசித்து பார்க்கவில்லையா. வாசித்திருப்பார்கள். இதை தட்டிக்கேட்கவோ தக்க பதில் எழுதி அறிவிக்கவோ அவர்களுக்கு அறிவே இல்லை பக்குவம் இல்லை என்பதை பறைசாற்றுகிறது.
Rate this:
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
05-மே-201722:27:05 IST Report Abuse
Rajendra Bupathi ஏண்டா இப்படி அலையிறீங்க திருந்தவே மாட்டீங்களா?எதால அடிச்சாலும் ஒங்களுக்கு எல்லாம் புத்தியே வராதா?
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
05-மே-201721:34:37 IST Report Abuse
m.viswanathan ஏன்யா ? நீ ஊரை கொள்ளை அடிப்பே உனக்கு பேரவை ஒரு கேடா ? அவனவன் மாதம் 10000 ரூபாய் சம்பாதிக்கவே கஷ்டப்படுறான் , தினக்கூலி வேலை கிடைக்காமல் சித்தாள் , கொத்தனார் அவதி படுகின்றனர் , நீ என்ன சவூதி மன்னரா , உன்னை போன்றோர் தமிழகத்தில் பிறந்ததே தமிழகத்தின் சாபக்கேடு
Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
05-மே-201722:28:32 IST Report Abuse
Rajendra Bupathiகவலைபடாதீங்க உங்கள் எண்ணபடியே அந்த கும்பல் விரைவில் பூண்டத்துதான் போகும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X