புதுடில்லி:வங்கித் துறையை பெரிதும் பாதித்து வரும், வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கிகள் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசர சட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இதன் மூலம், கடன் வாங்கி செலுத்தாமல் ஏமாற்றியவர்களுக்கு கடிவாளம் போடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
கடன் வாங்கி அதை செலுத்தாமல் ஏமாற்று வோரால், வங்கிகளின் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த, சில ஆண்டுகளில் வங்கிக ளின் வாராக் கடன் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.
இத னால், வங்கிகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த, 2016, டிச., 31
நிலவரப்படி, வங்கிகளின் மொத்த வாராக் கடன், ஏழு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வாராக் கடனை வசூலிக்க வங்கிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்க, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், வங்கிகள் கட்டுப் பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக, அவசர சட்டம் கொண்டு வரு வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த,3ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத் துக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, இந்த அவசர சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை நேற்று
வெளியிடப்பட்டது.இந்த அவசர சட்டத்தின்படி, கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை செலுத்தா மல் ஏமாற்றி வரும் தனி நபர்கள், நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, குறிப்பிட்ட வங்கிக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். அதன்படி, குறிப்பிட்ட தனிநபர் அல்லது நிறுவனங் கள் திவாலானவர்களாக
அறிவிக்கப்பட்டு, அவர்க ளுடைய சொத்துக் களை வலுக்கட்டாய மாக பறி முதல் செய்து, கடனை வசூலிக்க முடியும். மேலும் திவாலான வராக அறிவிக் கப்பட்டவர், எந்த ஒரு நிறு வனத்தின் இயக்குனர் குழுவிலும் இடம்பெற முடியாது.
இதுவரை, வாராக் கடனை வசூலிக்க, வங்கிகளுக் கான பொதுவான விதிமுறை களையே ரிசர்வ் வங்கி அறிவித்து வந்தது. அவசர சட்டத்தின்படி, குறிப்பிட்டகடனுக்கு ஏற்ப, அந்த வங்கிக்கு, அதில் எப்படி செயல்பட வேண்டும் என்று, ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். வங்கி களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனித் தனிக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும், அதற்கு உறுப்பினர் களை நியமிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. தேவைப்படும் வழக்கு களில், மத்திய அரசும் நேரடியாக தலையிட்டு, ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை வழங்க முடியும்.
இந்த அவசர சட்டத்தின் மூலம், வங்கிக் கடன்களை வாங்கி, அதை செலுத்தாதவர்கள், வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர் களுக்கு எதிராக உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்கும் கடிவாளம், ரிசர்வ் வங்கிக்கு கிடைத்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (12)
Reply
Reply
Reply