'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என, இரண்டாகப் பிரிந்துள்ளது.
தேர்தல் ரத்து
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணிகளும் பரபரப்பாக செயல்பட்டன. ஆனால், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட, அ.தி.மு.க., முக்கிய
நிர்வாகிகள், வீட்டில் சோதனை நடத்தினர். அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின. பணம்
பட்டுவாடாவில், முதல்வர் பழனிசாமி உட்பட, 7 அமைச்சர்களுக்கு தொடர்பு
உள்ளதற் கான, ஆதாரங்களும் கிடைத்துள் ளன. ஜெயலலிதா வின், கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை நடந்தது. இந்த கொலை வழக்கின், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட, டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிர் இழந்தார்.
பரபரப்பு
அவரது நண்பர், சயான் விபத்தில் சிக்கி, கோவை யில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இது பற்றிய விபரங்களை தொகுத்து, தமிழக பொறுப்பு கவர்னர், வித்யாசாகர் ராவ், மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு, அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, அரசியல் வட்டாரங் களில் கூறப்படுவதாவது:
கோடநாடு எஸ்டேட்டில், காவலாளி கொலையான தும்,அதைத்தொடர்ந்து நடந்த பல சம்பவங்களும், தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு
சீர்குலைந் துள்ளதையே காட்டுகின்றன. பெங்களூரு சிறை யில் உள்ள சசிகலாவின்
வழிகாட்டுதலில் தான், தமிழக அரசு நிர்வாகம் செயல்படு கிறது. இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் கமிஷனுக்கு தினகரன் லஞ்சமாக கொடுக்க இருந்த, பல கோடி ரூபாய் பணத்தை, நான்கு அமைச்சர்கள்,
ஹவாலா மூலமாக தர திட்ட மிட்டிருந்தனர். இது போன்ற விபரங்கள் எல்லாம், கவர்னர் அறிக்கையில் சுட்டி காட்டப் பட்டு உள்ளதாக தெரிகிறது.
நெருக்கடி
ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவில், முதல்வர், அமைச்சர்களுக்கு தொடர்பு; வருமான வரித் துறை சோதனை; அமைச்சர்கள் மீது வழக்கு, விசாரணை என, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, கவர்னர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் அறிக்கை வாயிலாக, பழனிசாமி அரசுக்கு, புதிய சிக்கல் வந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (76)
Reply
Reply
Reply