பதிவு செய்த நாள் :
ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு
தேர்தல் கமிஷனுக்கு பகிரங்க சவால்

புதுடில்லி: 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது எனக் கூறும் தேர்தல் கமிஷன், அதை சர்வதேச வல்லுனர்கள் முன் நிரூபிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் இருவர், சவால் விடுத்துள்ளனர்.

 ஓட்டு, இயந்திரங்களின், செயல்பாடு, தேர்தல், கமிஷனுக்கு பகிரங்க, சவால்

உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியை பிடித்ததை அடுத்து, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு

நடந்துள்ளதாக, காங்., பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் கமிஷன், இது குறித்து, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விளக்கம் அளிக்க முன் வந்துள்ளது.
இதற்கிடையே, சமூக ஆர்வலர் கள் பூணவாலா, வி.வி.ராவ் ஆகியோர், இந்த விவ காரம் தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு சவால் விடுத்துள் ளனர்; செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறை கேடு செய்ய முடியாது என கூறும் தேர்தல் கமிஷன், அதை சர்வ தேச வல்லுனர்கள் முன், நிரூபிக்க வேண்டும்;அப்படி செய்யும் போது, அதில் முறைகேடுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.

இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டால், தற்போது பயன்பாட் டில் உள்ள ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரத்தில் முறைகேடு நடப்பதை ஏற்க மறுப்பதாக, தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர், இன்று காலை, டில்லியில், தேர்தல் கமிஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Lemuria,இந்தியா
11-மே-201721:41:56 IST Report Abuse

Ramanஇயந்திரம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஹேக் செய்ய முடியும் ஆனால் அந்த கருவி DMZ என்னும் முறையில் இணையத்தில் இணைக்கப்படாதது . ஹேக் செய்பவர் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. கருவியின் அருகில் செல்ல வேண்டுமானால் பல அடுக்கு பாது காப்பு உள்ளது . அடுத்து கருவியானது மூட்டைக்குள் அரக்கு சீல் செய்து வைக்கப்பட்டு இருக்கும் . அந்த பகுதி முழுவதும் வீடியோ கண்காணிப்பு செய்யப்பட்டு இருக்கும் . கருவி மற்றும் நடைமுறை இரண்டும் இணைந்து தான் சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றன . ரஷ்யாக்காரனே வந்து பார்த்துவிட்டு பொய் இருக்கிறான் . வெளிநாட்டில் காசு வணங்கி கூவும் இவர்களை என்ன செய்தாலும் தகும்

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
11-மே-201719:51:21 IST Report Abuse

K.Sugavanamமுன்பு ஆதார்,இப்போது EVM ...எதிர்ப்பும்,ஆதரவும்..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-மே-201717:31:10 IST Report Abuse

Endrum Indianஎலே கூமூட்டை சமூக ஆர்வலர்களே டாஸ்மாக் நாட்டு ஆட்சியின் அவலத்தை அம்பலமாக்கு, மக்களுக்கு நல்லது செய், உன்னை பாராட்டுவர், ஈ.வீ.எம் சரியில்லை என்று முட்டாள்தனமான வாதத்துக்கு உனக்கு அமெரிக்காவிலிருந்து பணம் வந்திருக்கின்றதா அந்த கட்டளையுடன் என்று சொல் முதலில்.

Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
12-மே-201705:32:32 IST Report Abuse

Amal Anandanஅருமையான நாகரீகமான கருத்து. ...

Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X