அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக,மந்திரிகளின்,மோசடிகள்,தொடர்ந்து,அம்பலமாவது, அவலம்

தமிழக மந்திரிகளின் மோசடிகள், தொடர்ந்து அம்பலமாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள் ளது. மந்திரிகள் விஜயபாஸ்கர், காமராஜை தொடர்ந்து, பெண் மந்திரி சரோஜா, 30 லட்சம் ரூபாய் கேட்டு, பெண் அதிகாரியை அடாவடி யாக மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, பாதுகாப்பு கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

தமிழக,மந்திரிகளின்,மோசடிகள்,தொடர்ந்து,அம்பலமாவது, அவலம்

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச் சையாக செயல்படுகின்றனர். ஊழியர்கள் நியமனம், பணி இடமாற்றம், 'டெண்டர்' என, அனைத்திற்கும் லஞ்சம் பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக் கின. சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில், வாக்கா ளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்ததற்கான ஆவணங்களும் சிக்கின. அவர் மீது, இன்னமும் விசாரணை தொடர்கிறது.

அவரைத் தொடர்ந்து, மோசடி புகாரில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது, மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரூ.30 லட்சம்


இந்நிலையில்,30 லட்சம் ரூபாய் லஞ்சம்கேட்டு, பெண் அதிகாரியை, அமைச்சர் சரோஜா

மிரட்டியதாக, புகார் எழுந்துள்ளது. இது தொடர் பாக, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ராஜமீனாட்சி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:


ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2012ல், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், 2016ல், தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக, பணியில் சேர்ந்தேன். ஜெ., மறைவுக்கு பின், இப்பணியில் இருந்து என்னை நீக்க, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பல வழிகளில் தொல்லைகொடுத்தார். அவரை சந்தித்த போது, 'இந்த பணிக்கு, 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஜெய லலிதா, இலவசமாக பணி வழங்கி விட்டார். பணியில் நீடிக்க வேண்டும் என்றால், அந்த தொகையை தர வேண்டும்' என, மிரட்டினார்.

மாறுதல்


அதனால், 2017 பிப்ரவரியில், அவரிடம், என் தந்தை வாயிலாக, 10 லட்சம் ரூபாய் கொடுத் தேன். குடலிறக்க நோயால் அவதிப்பட்டதா லும், குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டி இருந்ததாலும், சென்னைக்கு மாறுதல் கோரி விண்ணப்பித்தேன்.

அமைச்சர் வீடு


இது தொடர்பாக பேச, அமைச்சர் சரோஜா, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அவரது வீட்டுக்கு அழைத்தார். மே, 7ல், அமைச் சரின் வீட்டுக்கு சென்றேன்; அங்கு, அமைச்சர், அவரது கணவர் மற்றும் கான்ட்ராக்டர் ஒரு வரும் இருந்தனர்.அமைச்சர் மற்றும் அவரது கணவர், பணி மாறுதல் அளிக்க, 20 லட்சம் ரூபாய் கேட்டனர். முன்னதாக, 'செலவினங் களை கூடுதலாக காட்டி, மாதம்தோறும்

Advertisement

மாமூல் தர வேண்டும்; சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு, 50 பேரிடம், தலா, 2.50 லட்சம் வசூலித்து தர வேண்டும்' என்றனர்.

நான் மறுத்தேன். ஆத்திரம் அடைந்த அமைச் சர், 'நான்கு ஆண்டுகளில், நான், 4,000 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும்; அதற்கு, ஒத்து ழைக்க வேண்டும். முடியாது என்றால், வேலையை விட்டு ஓடிவிடுங்கள். உங்கள் பணியின் தற்போதைய, 'ரேட்' 30 லட்சம்; அதை கொடுத்தால், பணி நிரந்தரம் செய்து விடு
கிறேன்; முடியாது என்றால், பணம் கொடுக்க காத்திருப்போருக்கு, விட்டுக்கொடுங் கள்' என்றார்.

மேலும், 'இதுகுறித்து வெளியில் சொன்னால், வேலையில் இருந்து நீக்கி விடுவேன். வீண் பழி சுமத்தி, அசிங்கப்படுத்தி விடுவேன்' என, மிரட்டி னார்.அமைச்சரால், எனக்கும், என் குடும்பத் தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்ற கமிஷனர், கரண் சின்ஹா, லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றம் செய்வதாக கூறி உள்ளார். அடுத்தடுத்து, அமைச்சர்கள் புகாருக்குள்ளா வது, அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கணவனே கணக்குப்பிள்ளை!


இதுகுறித்து, ராஜ மீனாட்சி கூறியதாவது:சமூக நலத்துறையின் கீழ் தான், பெண்கள், குழந்தை கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு உள்ளது. ஆனால், இந்த துறையின் அமைச்சர், பணம் கேட்டு மிரட்டுகிறார். பண வசூலிப்பில், அவரது கணவர், கணக்குப்பிள்ளை போல செயல்படுகிறார்.சத்துணவு பணியாளர் வேலைக்கு, 2 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். சமூக நலத்துறை யில், லஞ்சம் தலைவிரித் தாடு கிறது. லஞ்சப் பணத்தில் மஞ்சக்குளிக்கும் சரோஜா மீது, பிரதமர், கவர்னர், முதல்வருக் கும், ஆதாரங் களுடன் புகார் மனு அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-201723:27:48 IST Report Abuse

ரங்கன்இந்த அமைச்சர்களும் , எம்.எல்.ஏக்களும் தேர்தல் செலவுக்கு எத்தியெல்லாம் அடகு வெச்சு அம்மாவிடம் பணம் கொடுத்தாங்களோ?

Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
12-மே-201723:06:16 IST Report Abuse

m.viswanathanஒரு உறுதி எடுப்போம் . இனி வரும் தேர்தலில் அதிமுகவை தேர்வு செய்ய மாட்டோம் என . ஒருவேளை இந்த அயோக்கியன்கள் கட்சி மாறி , தேர்தலில் நின்றாலும் ஒட்டு போட மாட்டோம்

Rate this:
senthil - cbe,இந்தியா
13-மே-201718:59:14 IST Report Abuse

senthilஇரண்டு கலகக்காரர்களும் செய்த களேபரங்கள் போதும் போதும்... அடித்து துரத்தி விட வேண்டும்...அரசியல் வா(வியா)திகளை அடையாளம் கண்டு கொண்டோம்.... தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்றென்றும் மறக்க கூடாத நிகழ்வுகள்... அரசியல் வாதிகள் பச்சோந்திகள் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவ்வளவு மோசமான பச்சோந்திகள் என்பது இப்போதுதான் தெரிகிறது... இதுல ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த இயக்கம் இதுவாம்... இனிமேல் ஓட்டு போட காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் அவனை எதை கொண்டு வேண்டுமானாலும் அடிக்கலாம்.. அதே போல ஓட்டு போடாமல் இருந்து கொண்டு வெட்டி அரசியல் பேசும் நபர்களையும் சும்மா விடக்கூடாது... ஐந்து வருடம் உள்ளது என்பதால் தானே இந்த ஆட்டம் ஆடுகிறார்கள்... தேர்தல் விதிகளிலும் மாற்றம் கொண்டு வந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நபரை குறிப்பிட்ட காலத்தில் திரும்ப பெரும் சட்டம் அமல் படுத்த பட வேண்டும்.. ...

Rate this:
ananda - thirunelveli,இந்தியா
12-மே-201720:57:08 IST Report Abuse

anandaஏதோ புதுமை போல் மக்களுக்கு இந்த கருத்துக்களை வழங்குவது ஏன்? ஏற்கனவே தமிழகம் லஞ்சத்துக்கு பெயர் போனது தெறியாதா? தனியார் பள்ளிகளிலும், சிறுபான்மையினர் கல்விக்கூடங்களில் கூட தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் ஒவ்வொரு வேலை வைப்புகளுக்கும் கணிசமான பணம் லஞ்சமாக அரசு தரப்பிற்கும் செய்து வாங்கப்படுவதாக வதந்திகள் உள்ளன , இதை நியாயமான ரகசிய முறையில் விசாரித்தால் சிறுபான்மையினர் எவ்வளவாய் லஞ்சம் கொடுக்க கடடாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெறியவரும் ஆனால் வேலைக்கு லஞ்சம் கொடுக்கும் ஆசிரியர்களும் மற்றும் சிறுபான்மை அமைப்பினரும் எவ்வாறு பயமுறுத்தி லஞ்சம் கொடுப்பதற்கு தள்ளப்பட்ட்னர் என்பதையும் ரகசியமாக விசாரிக்க வேண்டும். பெரிய பெரிய உண்மையிலே பெரும் லன்ச் ஊழல்கள் வெளிவருவது நிச்சயம். இதனால் அரசு அதிகாரிகளை தவிர சிறுபாண்மை அமைப்பினரும் பாதிக்கப்படலாம் ஆனால் உண்மை மூடிமறிக்கப்படுவதுதான் நிஜம் . எதுவாயிருந்தாலும் நாட்டு மக்கள் இப்போதாவது விழிப்புணர்வு அடைந்து லஞ்சம் கொடுக்க மறுக்கவும் அதை கொடுப்பவரை தடுக்கவும் முன்வரவேண்டும். தங்கள் வேலைவாய்ப்பு தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்தாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு வேலை கிடைக்குமே அல்ல என்றால் வேலை வாய்ப்பு கிடையாம பொய் விடுமே, என்னும் அதிகமாக பணம் கொடுத்து வேளை வாங்கிக்கொள்ள பிறர் ஆயத்தமாயிருக்கிறார்களே என்ற ஏக்கத்தில் மக்கள் ஆத்தாமையினால் லஞ்சம் கொடுத்தாவது வேலையை தக்க வைத்துக்கொள்கிறார்கள்/.

Rate this:
மேலும் 151 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X