பொது செய்தி

தமிழ்நாடு

கோவை 'சிட்கோ' சிக்கலுக்கு தீர்வு:'தினமலர்' செய்தி எதிரொலி

Added : மே 12, 2017
Advertisement

கோவை:கோவை, 'சிட்கோ' தொழிற்பேட்டை நில மதிப்பு, பூஜ்யமாக மாற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பை, தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.தமிழக சிறு தொழில் கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சி தொழிற்பேட்டை, 56 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது; 300 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பம்ப்செட் முதல் 'வால்வு' தொழில்சாலை வரை, பல்வேறு பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.பூமி தான நிலமான இப்பகுதியை, 40 ஆண்டுகளுக்கு முன் மாற்றி, தமிழக அரசு தொழிற்பேட்டை அமைத்தது. நிலங்களை வாங்கிய தொழில்முனைவோருக்கு கிரயமும் செய்து தரப்பட்டுள்ளது. வங்கிகளில் நிலம் அடமானம் வைத்து கடனுதவி பெற்று, தொழில்முனைவோர் தொழில் நடத்தி வருகின்றனர்.சிட்கோ தொழிற்பேட்டையில், 172, 186 சர்வே எண்களுக்கு உட்பட்ட நில மதிப்பு பூஜ்யம் என, 2015ல் மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு கடனுதவி நீட்டிப்பு செய்ய, வங்கி நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை.இது குறித்து விரிவான செய்தி, 'தினமலர்' நாளிதழில், ஏப்., 14ல் வெளியானது. இதையடுத்து, நில மதிப்பு பூஜ்யம் என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.கோவை 'சிட்கோ' தொழிற்பேட்டை நிறுவன உரிமையாளர்கள் நல சங்க (கொசிமா) தலைவர் லோகநாதன் கூறுகையில்,''இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலவிய இப்பிரச்னைக்கு, 'தினமலர்' நாளிதழ் செய்தியால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இதனால், முடங்கிய தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெறும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X