பதிவு செய்த நாள் :
எச்சரிக்கை!
பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு மோடி...
பாகிஸ்தானை கண்டித்து பிரதமர் ஆவேச பேச்சு

கொழும்பு:''இரு நாடுகளுக்கு இடையேயான மோதலால் மட்டும் வன்முறை, பயங்கரவாத சம்பவம் நடப்பதில்லை; அந்த மனநிலையுடன், ஊக்குவித்து வரும் நாடுகளால், உலக நாடு களுக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது,'' என,பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.

 பயங்கரவாதம், குறித்து, உலக, நாடுகளுக்கு, மோடி, எச்சரிக்கை!,

கடந்த இரு ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, இலங்கைக்கு பயணம் மேற் கொண்டு உள்ளார், பிரதமர் மோடி. கொழும்பில் நேற்று நடந்த, புத்த பூர்ணிமா விழாவில், சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார். புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, மறைந்ததை உணர்த்தும் வகையில், சர்வதேச விசாக் தினமாக, புத்த பூர்ணிமா விழா, இலங்கையில் கொண்டாடப்படுகிறது.

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, பிரத மர் ரணில் விக்கிரமசிங்கே, புத்த மதத் துறவி கள், பல்வேறு நாடுகளின் துாதர்கள் உள்ளிட் டோர் பங்கேற்ற இந்த விழாவில், பயங்கரவாத தாக்குதலை நடத்தி வரும், அண்டை நாடான, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல், அதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவும், இலங்கையும், புத்தரின் தத்து வங்களால் இணைந்துள்ளன. இந்த நுாற்றாண் டிலும், அவருடைய தத்துவங்கள் பொருத்த

மானதாக உள்ளன. அவருடைய போதனைகள், இன்றும் நம்முடைய அரசு நிர்வாகம், கலாசாரத் தில் இணைந்துள்ளன. வெறுப்பு மற்றும் அதனுடன் இணைந்த பயங்கரவாதம், வன்முறையை மட்டுமே, தன் கொள்கையாக கொண்டு, அதை பரப்பி வரும் நாடு, பேச்சுக்கு முன்வர மறுக்கிறது.

அதற்கு பதிலாக, உயிர் பலி, அழிவை மட்டுமே அது விரும்புகிறது. அந்த ஒரு நாட்டின் இந்த மனப் போக்கினால் தான், இந்த பிராந்தியத்தில், பயங்கர வாதம் என்பது, கொடூர வியாதி போல பரவி வருகிறது. குறிப்பிட்ட சில நாடுகளின் மனப்போக்கு, அதன் ரத்தத்தில் ஊறியுள்ள வன்முறை, அதையே கொள்கையாக பின்பற்றுவது,துாண்டிவிடுவது ஆகியவையே, உலகெங்கும் நடக்கும் வன்முறை, மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், பரவி வரும் இந்த வன்முறை சவாலை சமாளிக்கும் ஒரே வழியாக, புத்தரின் கொள்கைகள், கோட்பாடுகள், போதனைகள் அமைந்துள்ளன.புத்தரால் இணைந் துள்ள இந்தியாவையும், இலங்கையையும் இணைக் கும் வகையில், வரும் ஆகஸ்ட் முதல், வாரணாசி யில் இருந்து, கொழும்புக்கு நேரடி விமானம் இயக் கப்படும்.
புத்தர் போதித்த அமைதி, அன்பு, ஒற்றுமை ஆகிய வற்றை, நம் இரு நாடுகளும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இலங்கையின் வளர்ச்சிக்கான திட்டங் களில், இந்தியா எப்போதும் பங்கேற்க தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

'எம்.ஜி.ஆர்., - முரளிதரன்'


இலங்கைக்கு சென்றுள்ள பிரதமர், இலங்கை வாழ் தமிழர்கள் இடையே பேசினார்.அப்போது, அவர் கூறியதாவது:

இந்தியா மற்றும் இலங்கையின் வளர்ச்சியில், தமிழர்களின் பங்கு மிகப்பெரியது. கடின உழைப்பின்

Advertisement

மூலம், இரு நாட்டிலும் தமிழர்கள் ஆற்றிய பணி களை யாராலும் மறக்க முடியாது. இதற்காக, தமிழர் கள்என்னுடைய பாராட்டை யும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கி றேன்.இந்த உலகுக்கு, எம்.ஜி.ஆர்., மற்றும் முத்தையா முரளிதரன் என்ற மிகப்பெரிய பரிசை,தமிழ் சமுதாயம் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையின் கண்டி நகரில் பிறந்த, எம்.ஜி.ஆர்., தமிழ் படங்களில் நடித்து, 'புரட்சித் தலைவர்' என, அவருடைய ரசிகர்களால் அழைக்கப் பட்டார். தமிழக முதல்வராகவும், மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் விளங்கியவர்.
இலங்கையின் கண்டி நகரில் பிறந்த, தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக் கெட் அணிக்காக விளையாடியவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில்,அதிக விக் கெட் வீழ்த்திய சாதனையை புரிந்தவர். சென்னையைச் சேர்ந்த பெண்ணை, அவர் மணந்தார்.

தேநீருடன் தொடர்பு


இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள, டிகோயா பகுதியில், தேயிலை தோட்டப் பணி யில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் இடையே, மோடி நேற்று பேசினார்.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில்,பிரதமர் மோடி பேசிய தாவது: எனக்கும்,தேநீருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த வகையில் உங்களுக் கும், எனக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நேர்மை யான உழைப்பை மதிக்கும் வகையிலும், அவர் களை கவுரவப் படுத்தும் வகையிலும் தான், 'சாய் பே சர்ச்சா' என்று, தேநீருடன் விவாதம் என்பதை துவக்கினேன். ஏனென்றால், நானும் டீக்கடையில் வேலை செய்தவன் தான். இவ்வாறு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
13-மே-201718:11:51 IST Report Abuse

Balajiஇவரது பயணத்த்தில் தமிழக மீனவர்களின் (பிடித்து வைத்துக்கொண்டிருக்கும்) படகுகளை மீட்பது பற்றியும், இரு நாட்டு மீனவர்கள் சுமுகமாக மீன்பிடி தொழிலை மேற்கொள்வது பற்றியும், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்முடித்தனமாக தாக்குவது குறித்தும் எதையும் பேசி இனி அதுபோன்று நிகழாமல் இருக்க பேசியிருக்கிறார்களா என்பது தெரிவில்லை........ இலங்கை சென்றுள்ளதை இதுபோன்ற விஷயங்களுக்காகவும் பயன்படுத்தியிருந்தால் வரவேற்கலாம்........ இன்னும் அதுபோன்று எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனபதை பார்க்கும்போது பேச்சுவார்த்தைகள் நடந்திருக்குமா என்பதை சந்தேகிக்க தோன்றுகிறது.......... பார்க்கலாம் இன்று மாலை அல்லது நாளை ஏதாவது செய்திகள் வருகிறதா என்று...........

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
13-மே-201713:26:24 IST Report Abuse

Mohan Nadarராஜா பக்சே தலைமையில் ஆட்சியின் போது 40000 அப்பாவி தமிழர்கள் அழிப்பு ,மோடி தலைமை ஆட்சியின் போது குஜராத்தில் 3000 மேல் அப்பாவிகள் கொலை ,,இரண்டுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை ,இரண்டு பேரும் சேர்ந்து அமைதி,புத்தரின் தத்துவதை பேசுவது ???????

Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
13-மே-201716:02:07 IST Report Abuse

DSM .S/o PLM Mohan Nadar - Mumbai,இந்தியா :- மோடி தலைமையில் குஜராத் இல் வன்முறை தூண்டியது யார் என்பதும், அதற்கு மூல காரணம் என்ன என்பதும் உமக்கு தெரியும்.. இந்த உலகிற்கே தெரியும்.. இருந்தும் இப்படி ஒரு கருத்தை திரும்ப திரும்ப பதிவிடுவதன் மூலம் உங்களை மாதிரி ஆட்கள் நிரூபிக்கமுனைவது என்ன ?....காஸ்மீரில் ஆதி காலம் தொட்டே இஸ்லாமியர்கள்தான் வாழ்கின்றனர்.. இந்து பண்டிட்கள் அவர்களாகவே காஸ்மீரின் குளிர் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.. காங்கிரஸ் போராட்டமே இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தது ...நேருவின் குடும்பம் காஸ்மீரத்து பண்டிதர் குடும்பம்.. கருணாநிதி நேர்மையானவர்.. பெரியார் தமிழர்..பிரபாகரன் இலங்கை தமிழர் சுதந்திரத்திற்காக மட்டுமே உழைத்தார். காந்தி என்ற பெயரை இந்திரா வின் பின்னால் சேர்த்து கொள்ளலாம் .. அக்பர் கால ஆட்சி பொற்கால ஆட்சி .. ஷாஜகான் தாஜ் மகாலை காதலின் சின்னமாக கட்டினார்..காங்கிரசும் திமுக வும் சிறுபான்மை மக்களுக்காக உழைக்கின்றன... இப்படி இன்னும் எத்தனை பொய்களை சொல்லிக்கொண்டே இருப்பீர்களோ தெரியவில்லை .. ...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
13-மே-201716:08:17 IST Report Abuse

தேச நேசன் அடடா செத்த 1500 பேரும் அப்பாவிகளா? யார் சொன்னாங்க?எல்லாம்வல்லவனா ?? ...

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-மே-201719:43:18 IST Report Abuse

Rafi அவர்கள் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? போலீஸ் பாதுகாப்புடன் பயங்கரவாதிகள் துணையுடன் நடந்தேறியதை உலகம் கண்டதே ...

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
13-மே-201713:25:47 IST Report Abuse

 ஈரோடுசிவாமோடிஜி ஒரு நல்ல நிர்வாகி மட்டுமல்ல... மிகச்சிறந்த ராஜதந்திரியுமாவார்...வாழ்க பாரதம்...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X