ரூ.1,000 கோடி ஊழல்: லாலு மீது பா.ஜ., புகார்

Added : மே 13, 2017
Advertisement
ரூ.1,000 கோடி ஊழல்: லாலு மீது பா.ஜ., புகார்

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்து, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக, பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீது, அடுத்தடுத்து, ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், லாலு பிரசாத், 2008ல், ரயில்வே அமைச்சராக இருந்த போது, அவரது மகளும், ராஷ்ட்ரீய ஜனதா தள, எம்.பி.,யுமான மிசா பாரதி மற்றும் லாலுவின் மகன்கள் பெயரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகள், கட்டடங்கள் வாங்கப்பட்டதாக புதிய புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ரயில்வே அமைச்சராக இருந்த போது, அவரது குடும்பத்தினர் பல்வேறு நிறுவனங்களை துவக்கியுள்ளனர். லாலுவின் வீட்டு முகவரியில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு உள்ளன. இந்த தொழிலும் நடைபெறாமல், இந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளன.
ஊழல் செய்த பணத்தில், பீஹாரில் பல இடங்களில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளனர்; இதன் மதிப்பு, 1,000 கோடி ரூபாய். பீஹார் தலைநகர், பாட்னாவில் தற்போது, 7.5 லட்சம் சதுர அடியில், பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்திலும், லாலு குடும்பத்தின் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் மீது, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X