நடிகைக்கு கோயில் கட்டும் போது அம்மாவுக்கு கட்டக்கூடாதா - ராகவா லாரன்ஸ் 'பளீச்'| Dinamalar

நடிகைக்கு கோயில் கட்டும் போது அம்மாவுக்கு கட்டக்கூடாதா - ராகவா லாரன்ஸ் 'பளீச்'

Added : மே 21, 2017
நடிகைக்கு கோயில் கட்டும் போது அம்மாவுக்கு கட்டக்கூடாதா - ராகவா லாரன்ஸ் 'பளீச்'

இவர் நடந்தாலே கால்கள் நடனமாடும். இவரது ஒவ்வொரு அசைவும் 'ஸ்டைலாக' கலக்கும். நடனமாகட்டும், நடிப்பாகட்டும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வசமாக்கி வைத்திருந்த இவர், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு எல்லா இளைஞர்களும் விரும்பும் 'ஹீரோ'வாகிவிட்டார். அவர்தான் நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ்.குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்ட லாரன்ஸ், இரண்டு ஆண்டுகளாக தன் 60 வயது தாய் கண்மணிக்காக ஒரு கோயிலை கட்டி வருகிறார். இதன் 'கும்பாபிேஷகம்' உலக அன்னையர் தினமான இன்று (மே 14) நடக்கிறது.இதுகுறித்து தினமலர் அன்னையர் தின ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார் ராகவா லாரன்ஸ்...* அம்மாவுக்கு கோயில் கட்ட வேண்டும் ஏன் தோன்றியது?''இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக அன்னையர் தினத்தில்தான் அம்மாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அம்மா என்பவர், நாம் நேரில் பார்க்கும் தெய்வம். அவர் இல்லையென்றால் நானோ, நீங்களோ இந்த உலகில் இல்லை.* அம்மா ஏற்றுக்கொண்டார்களா?எல்லா உயிரினங்களுக்கும் 'அம்மா' என்ற உறவு உயர்வானது. தெய்வீகமானது. நான் கோயில் கட்ட போகிறேன் என சொன்னவுடன், 'இதெல்லாம் எதுக்குப்பா...' என அம்மா கேட்டார்.* அம்மா கோயில் ஸ்பெஷல்?நான் ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவன். சென்னை அம்பத்துார் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் 'அம்மா' கோயில் கட்டி வருகிறேன். மூலவராக 13 அடி உயரத்தில் காயத்ரி சிலை வடிவமைத்துள்ளேன். அதற்கு கீழ் அம்மா கண்மணியின் சிலையை 5 அடி உயரத்தில் அமைத்துள்ளேன். என்னை பொருத்தவரை அம்மாவும், தெய்வமும் ஒன்றுதான் என்பதால், கோயிலை திறந்த பிறகு, அம்மாவுக்கும், காயத்திரி அம்மனுக்கும் தினமும் பூஜை நடக்கும்.* மற்றவர்கள் இதை பாராட்டினார்களா?பலரும் பல வழிகளில் என்னை தொடர்பு கொண்டு நல்ல காரியம் என்றார். இறந்த பிறகு காசி, ராமேஸ்வரம் சென்று அம்மாவை தெய்வமாக கருதி சடங்கு செய்வதை விட, இருக்கும்போதே தெய்வங்களுக்குரிய சடங்கை செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து. கோயில் கட்டுவதை சிலர் கிறுக்குத்தனமாக நினைத்தாலும், அதுபற்றி எனக்கு கவலை இல்லை.* அடுத்த திட்டம்?அடுத்து அம்மாவை போற்றும்விதமாக, அம்மா கோயில் மூலமாக திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துள்ளேன். கோயிலில் பூஜை செய்வதை விட, அதன் மூலம் தர்மம் செய்வதுதான் இப்போதைக்கு எனது திட்டம்.* அம்மாவுக்கு கோயில் அவசியமா?ஏன் சார்... நடிகைகளுக்கு எல்லாம் கோயில் கட்டும்போது, அம்மாவுக்கு கட்டக்கூடாதா?வாழ்த்த: larencceharitabletrust@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X