'டெண்டர்' கமிஷன் பிரிப்பதில் மா.செ.,க்கள், மந்திரிகள் குடுமிப்பிடி! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
டெண்டர், கமிஷன், மா.செ.,க்கள், மந்திரிகள், குடுமிப்பிடி

'டெண்டர்' கமிஷன் பிரிப்பதில், மாவட்ட செயலர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே, குடுமிப்பிடி சண்டை துவங்கி உள்ளது. கிடைத்ததை எல்லாம், ஆளாளுக்கு சுருட்டுவதால், கொதிப்படைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்து, புகார் பட்டியல் வாசித்துள்ளனர். ஆளும் கட்சியினர் தரும் அடுத்தடுத்த நெருக்கடிகளால், பழனிசாமி அரசு தவிக்கிறது.

டெண்டர், கமிஷன், மா.செ.,க்கள், மந்திரிகள், குடுமிப்பிடி


சென்னை, கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்தபோது, 'நான்கு கோடி ரூபாய் ரொக்கம்; 1 கிலோ தங்கம்; அரசு பணிகளில் கமிஷன்; பணி நியமனத்தில் பங்கு' என, சசிகலா குடும்பத்தினர் வாக்குறுதிகளை வாரி வழங்கினர்.
அதை நம்பி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சசிகலா கை காட்டிய பழனிசாமி, முதல்வராக ஆதரவு அளித்தனர். சசிகலாவும், தினகரனும் சிறை சென்ற பின், கூவத்துார் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

10 எம்.எல்.ஏ.க்கள்


அதேநேரத்தில், 'டெண்டர்' பணிகளில், அமைச்சர்கள் சார்பில், முன்னர், 8 சதவீத கமிஷன் பெறப்பட்டது. அதை தற்போது, 14 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். அதில், எம்.எல்.ஏ.,க்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும் எந்தப் பங்கும் தருவதில்லை. அதனால், மாவட்ட செயலர்களும், எம்.எல்.ஏ.,க்களும் கொதிப்படைந்துள்ளனர். 'அமைச்சர்கள் சம்பாதிக்க, நாங்கள் ஒத்துழைக்க வேண்டுமா' என, குமுறுகின்றனர்.
அது மட்டுமின்றி, சத்துணவு பணியாளர்கள், கால்நடை உதவியாளர்கள், பள்ளி ஆய்வக உதவியாளர்கள், ஆசிரியர் பணி நியமனங்களில், அமைச்சர்களுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்களும், மாவட்ட செயலர்களும் உரிமைக் குரல் எழுப்பியுள்ளனர். இது போன்ற பணி நியமனங்களில், கிடைத்ததை

எல்லாம் அமைச்சர்கள் சுருட்டிக் கொள்ளக் கூடாது; எங்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், பழனியப்பன், வெங்கடாசலம், செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில், 1௦க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அணி திரண்டுள்ளனர். அவர்கள், ரகசிய கூட்டங்கள் நடத்தி, கூவத்துார் வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி, முதல்வரை சந்தித்து முறையிட, முடிவு செய்தனர்.
அதன்படி, பழனியப்பன், வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ.,க்கள் செய்யாறு மோகன், அரூர் முருகன், ஆம்பூர் பாலசுப்ரமணி ஆகியோர், நேற்று பகல், 1:00 மணியளவில், சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்.

தனித்தனியே


அப்போது, 'கூவத்துாரில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கிடைத்ததை எல்லாம் ஆளாளுக்கு சுருட்டுகின்றனர். எனவே, உடனடியாக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, வலியுறுத்தினர். அமைச்சர்கள் மீதான புகார்களை, ஆறு எம்.எல்.ஏ.,க்களும், 45 நிமிடங்கள் பட்டியலிட்டனர். அதன்பின், மூத்த அமைச்சர்களை, தனித்தனியே சந்தித்து பேசினர்.
அவர்கள் சென்ற பின், மூத்த அமைச்சர்கள் ஒன்று கூடி, எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். பின், முதல்வருடன் பேசினர். அந்தக் கூட்டத்தில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான வைத்திலிங்கமும் பங்கேற்றனர்.
ஆளும் கட்சியில், இது போன்ற அதிருப்தி கோஷ்டிகள் அதிகரித்து வருவதும், அவர்கள் பகிரங்கமாக கொடி துாக்கியிருப்பதும், பழனிசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.சி., - எஸ்.டி.,எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி


ஏற்கனவே, ஆதிதிராவிட எம்.எல்.ஏ.,க்கள், தமிழ்செல்வன் தலைமையில்,

Advertisement

ரகசிய கூட்டம் நடத்தினர். தங்கள் சமுதாய எம்.எல்.ஏ.,க்களே அதிகம் உள்ளதால், அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டும் என, வலியுறுத்தினர். அவர்களை, முதல்வரோ, மூத்த அமைச்சர்களோ அழைத்து பேசவில்லை. ஆனால், நேற்று செந்தில் பாலாஜி உட்பட, ஆறு பேரை மட்டும், முதல்வர் சந்தித்து பேசியது, ஆதிதிராவிட எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அவர்கள் கூறும்போது, 'எங்களை அழைத்து பேசவில்லை. எங்கள் எதிர்ப்பை, மானிய கோரிக்கையின் போது வெளிப்படுத்துவோம்' என்றனர்.

பொதுச்செயலர் பதவி விலகுகிறார் சசிகலா?


பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், சமீபத்தில், சந்தித்து பேசினர். அப்போது, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியை, ராஜினாமா செய்யும்படி, சசிகலாவிடம் வலியுறுத்தியுள்ளனர். மன்னார்குடி குடும்பத்தினர் ஆலோசனைப்படியே, இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: மத்திய அரசின் நெருக்கடியிலிருந்து, மன்னார்குடி குடும்பத்தினர் விடுபட வேண்டும் என்றால், உடனடியாக இரு அணிகளும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, சசிகலா குடும்பத்தினர் ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளனர்.ஆனாலும், சில நிபந்தனைகள் விதிக்கின்றனர்.
அதாவது, பொதுச் செயலர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தேர்வு செய்ய வேண்டும். முதல்வர், பொருளாளர் பதவிகளை, பன்னீர்செல்வத்திற்கு வழங்கினால், துணை முதல்வர் பதவியை, பழனிசாமிக்கு தர வேண்டும் என்பதே, அவர்களின் நிபந்தனை.

அதை நிறைவேற்ற சம்மதித்தால், பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்ய, சசிகலா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
23-மே-201723:41:28 IST Report Abuse

PRAKASH.PIvangalakku nalla thookam varadhu

Rate this:
Jaffarali Rahimkhan - nagarcoil,இந்தியா
23-மே-201721:01:38 IST Report Abuse

Jaffarali Rahimkhanஓட்டுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் பெரும் கலாசாரம் என்று ஒழிகிறதோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம் மலரும். ஊழல் ஒழியும்.பெருந்தலைவர் காமராஜர் போல நல்லவர்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டும்.இந்தியாவிலேயே பணம் சம்பாதிக்கும் பெரிய தொழில் என்னவென்றால் அது அரசியல் மட்டுமே. தமிழ்நாட்டில் மட்டுமே.

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
23-மே-201720:15:26 IST Report Abuse

NancyCBI & ED and all other nation crime barances work , please monitor all ADMK persons (from local member to eps) all are planning to look public money,

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X