தமிழக அரசியலில் ரஜினி: நண்பர்கள் திடீர் சர்வே| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசியலில் ரஜினி: நண்பர்கள் திடீர் சர்வே

Added : மே 23, 2017 | கருத்துகள் (43)
Advertisement
தமிழக, அரசியல், ரஜினி,நண்பர்கள், திடீர் சர்வே

சென்னை:நடிகர் ரஜினி, புதிய கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்துக்கு, முன்னோட்டமாக, தன்னுடைய ரசிகர்களை 12 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து, அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். கூடவே, அரசியல் குறித்து, தன்னுடைய எண்ணங்களையெல்லாம் அவர்களிடம் சொல்லி, நான் அரசியலுக்கு வந்தால் ஜெயிக்க முடியுமா என கேட்டு, ரசிகர்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டுக் கொண்டார். ஒரு சில ரசிகர்களைத் தவிர, மற்ற அனைவருமே, ரஜினி, கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள்தான், தமிழகத்தின் அடுத்த முதல்வர் என, கூறினர்.


மக்களின் நினைப்பு அறிய ஆவல்

இருந்தாலும், அதை முழுமையாக நம்பாத ரஜினி, இன்னமும், அரசியலில் தீவிரமாக இறங்குவது குறித்து, கடுமையான குழப்பத்தில் இருந்து வருவதாகவே கூறப்படுகிறது.
இதற்காக, தன்னுடைய பெங்களூரு நண்பர்களை அழைத்து, தொடர்ச்சியாக அரசியல் குறித்து அவர்களிடம் பேசி வரும் ரஜினி, தன்னுடைய சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் குறித்து, தமிழக மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய தான் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், பலதரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துக் கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


ரகசிய சர்வே


ரஜினியின் நண்பர்கள், தங்கள் நண்பர்கள் மூலம், தமிழகம் முழுவதும் ரகசிய சர்வே நடத்த தீர்மானித்துள்ளனர். விரைவில், நடத்தப்படவிருக்கும் அந்த சர்வேயில், கீழ் கண்ட கேள்விகளை கேட்டு, அதன் விவரங்களை அறிய வெடுத்துள்ளனர்.

· ரஜினி அரசியலுக்கு வரலாமா?
· வந்தால் அவருக்கு ஓட்டளிப்பீர்களா?
· தற்போதைய தமிழக அரசு செயல்பாடு சரியாக உள்ளதா?
· ஜெயலலிதா என்ற அரசியல் ஆளுமை இல்லாத நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரை ஆதரிப்பீர்களா?
· எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி?
· ரஜினி, தனிக்கட்சி துவங்கி செயல்படலாமா? அல்லது ஏதாவது ஒரு தேசிய கட்சியில் இணைந்து செயல்படலாமா?
· ரஜினியால் ஊழல் அற்ற நிர்வாகத்தை தர முடியும் என நம்புகிறீர்களா?
· திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ரஜினி திகழ முடியுமா?
· ரஜினியின் சமீபத்திய செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இப்படி பல கேள்விகளை மக்களிடம் கொண்டு சென்று, அவர்களின் கருத்துக்களை அறிந்து, ரஜினியிடம் சேர்ப்பிக்கும் முனைப்பில், அவரது நண்பர்கள் இறங்கி உள்ளனர்.





வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-மே-201714:06:31 IST Report Abuse
மலரின் மகள் குழப்பமாகவே இருந்து கொஞ்சமும் தைரியமாக முடிவெடுக்க தெரியாதவர். எவ்வாறு ஆட்சியில் சிறப்பு பெறுவார். ஆளுமைத்தன்மை குறைவு, பத்தாது. நம் மனதில் இருப்பவர்கள் கர்மா வீரர் காமராஜர், கக்கன் போன்றோரே. ராஜாஜி போன்றோரும் தான் ஆட்சியில் இருக்க வேண்டும். ரஜினியை வைத்தாலும் அவருடன் இனியும் அமைச்சரவை ஊரை கெடுத்த பெருச்சாளிகள் தான் இருக்கும். சம்பந்திகள் எல்லோரும் பெரிய அமைச்சர்கள் ஆகிவிடுவார்கள். சத்திய நாராயணா தான் இவருக்கு அடுத்த நிலையில் பினாமியாக இருப்பர். இது போன்ற லூசுத்தனமான அமைச்சரவை அமைய கூடாது. கர்நாடக அரசியலில் காவிரியில் இவர் யார் பக்கம் இருப்பர் என்று தெரியும். விளையும் பொது பயிர் எப்படி இருந்தது என்று பெரியவர்களுக்கு தெரியும். பட் றோசாக்களும் காகித பூக்களும் பார்த்து விட்டு அலங்காரமாக இருக்க மட்டுமே தான். இறைவனுக்கு மாலையாக்க கூடாது. தமிழ் அன்னைக்கு துளசியும் சந்தனமும் தான் சாத்த வேண்டும். அதுவரை நடப்பது நடக்கட்டும். அடுத்த தேர்தலில் நல்ல அமைப்புகள் வரும். ரஜினி பின்னால் வேண்டாம். சினிமா காரர்களை தான் ஏற்க வேண்டும் என்றால் பாரதி ராஜாவை கூட ஏற்கலாம். அவர் இளைஞர்களுக்கு தரும் மரியாதை தமிழ் உணர்வாலேய வளர்ந்தவர். ரத்தத்திலும் ஜீனிலும் உள்ளது. அவரை கூட ஏற்கலாம், வேற்று ஸ்டார் வேண்டவே வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
24-மே-201713:51:12 IST Report Abuse
ஜெயந்தன் அரசியலுக்கு ரொம்ப சீக்கிரம் வராரோ... இப்ப 67 வயதுதானே...இன்னு போகட்டுமே...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
24-மே-201708:48:54 IST Report Abuse
K.Sugavanam சிலநாட்களுக்குமுன் வெளிநாடு போன தொழிலதிபரோடு கலந்து கொண்டு கட்சி கொடி,அதில் பொறிக்க வேண்டிய இலச்சினை,எல்லாம் முடிவு செஞ்சாராமே..அநேகமா ஆகஸ்டு 15 அன்னிக்கி புதிய கட்சி பெரு வெளியிடுவாராம்ன்னு ஒரு பத்திரிகை செய்தி..தனக்கு நெருங்கிய பத்திரிகையாளர் ஒருவரையும் கலந்து மாத்தாடினாராமே...கலக்குறாரு சூப்பர்..வெண்ணை வருதா இல்ல தாழி உடையுதான்னு பாக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X