"வாட்ஸ்அப்' குழுவும் வஞ்சிர மீனும்!

Added : மே 24, 2017
Advertisement
ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத அளவுக்கு, திருப்பூர் மாநகராட்சி நிலைமை இப்படி போயிடுச்சே பார்த்தியா,'' என்று சித்ரா கூறிக்கொண்டே மித்ராவை அழைத்து கொண்டு, கடைவீதிக்கு சென்றாள்.""ஆமா. மாநகராட்சி "திவால்' ஆகிற நிலைமைக்கு வந்துடுச்சா,'' என்று மித்ரா கேட்டாள். ""ஊழியர்களுக்கு, மாத சம்பளமாக, 2.65 கோடி ரூபாய் தேவைப்படுது. இதற்குன்னு, குறிப்பிட்ட தொகை,
"வாட்ஸ்அப்' குழுவும் வஞ்சிர மீனும்!

ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத அளவுக்கு, திருப்பூர் மாநகராட்சி நிலைமை இப்படி போயிடுச்சே பார்த்தியா,'' என்று சித்ரா கூறிக்கொண்டே மித்ராவை அழைத்து கொண்டு, கடைவீதிக்கு சென்றாள்.
""ஆமா. மாநகராட்சி "திவால்' ஆகிற நிலைமைக்கு வந்துடுச்சா,'' என்று மித்ரா கேட்டாள். ""ஊழியர்களுக்கு, மாத சம்பளமாக, 2.65 கோடி ரூபாய் தேவைப்படுது. இதற்குன்னு, குறிப்பிட்ட தொகை, பட்ஜெட்டில் ஒதுக்கிடறாங்க.
அதனால, பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில்லாம, அதிக வருவாய் உள்ள மாநகராட்சியாகவும் இருக்கு.
""ஆனா, நிதிகளை கையாள்வதில் தான் சிக்கல் இருக்கு. வரியினங்கள் வசூலிக்கிறதில் மந்தம், நிலுவை வரி வசூலில் குறுக்கீடுன்னு பல காரணங்கள் இருக்கு,'' என்றாள் சித்ரா.
""போன மாசம், கோவையில், துறை இயக்குநர் ரத்னவேல் நடத்தின ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சியின், 201617 வரவு செலவு கணக்குகளை, சிறப்பு தணிக்கை குழு அமைச்சு, சரி பார்க்க உத்தரவு போட்டாராமே; அது என்னாச்சு?,''என்று மித்ரா கேட்டாள்.
""அந்த கணக்குகளை தணிக்கை செஞ்ச அதிகாரியை தான், அமைச்சர் வரை அழுத்தம் கொடுத்து, தூக்கியடிச்சுட்டாங்களே. அந்த கணக்குகளை எல்லாம் சிறப்பு தணிக்கை செய்தால், பல சிக்கல்கள் வருமாம். அதனால் தான், துறை இயக்குநரின் உத்தரவையே தூக்கி போட்டுட்டாங்க,'' என்று சித்ரா விளக்கமாக கூறினாள்.
""மாநகராட்சி பத்தின இன்னொரு மேட்டர் இருக்கு,'' என்று மித்ரா கூற, ""ஓ? அப்படியா?'' என்று, சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி, மாநகராட்சி சில நடவடிக்கைகளை எடுத்தது. அதில், பிரதான குழாயில் இருந்து, வர்த்தக நிறுவனங்களுக்கு நேரடியா வழங்கின குழாய் இணைப்புகளை துண்டிச்சு, வினியோக குழாய் மூலம் இணைப்பு கொடுத்தாங்க. ஆனா, என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியல. சமீபத்தில, மீண்டும் பழையபடியே பிரதான குழாய்களில் இணைப்பை கொடுத்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""இவ்வளவு போலீஸ் இருந்தும், பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே வழிப்பறி நடக்கிற அளவுக்கு, நிலைமை மோசமாயிடுச்சு பார்த்தியா,'' என்று அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா.
""அட அப்படியா?'' என, சித்ரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.
""ஆமா. பாலம் வேல நடக்கறதால, ராத்திரியில் பல பேர் அங்க படுத்து தூங்கறாங்க. யார் வர்றாங்க? யார் போறாங்கனு தெரியலை. ஒருத்தர், ராத்திரி, ஒரு மணிக்கு, அந்தவழியா நடந்து போயிருக்காரு. எதிரே வந்தவர், ""கையில எவ்ளோ பணம் இருக்கு?'' என்று கேட்டு, கத்தியை காட்டி மிரட்டியிருக்காரு. ஆத்திரமடைந்த அவர், பாலம் பக்கத்தில் இருந்த பெரிய இரும்பு கம்பியை எடுத்து, "வாடா, நீயா நானானு பாத்திடலாம்,' என்று மிரட்ட, உஷாரான வழிப்பறி திருடன், "எஸ்கேப்' ஆயிட்டான்,'' என்றாள் மித்ரா.
""அடப்பாவமே. நம்ம போலீஸ் ரோந்தெல்லாம் வந்தாதானே, இதெல்லாம் குறையும்,'' என்றாள் சித்ரா.
""அடுத்ததா, ஒரு காமெடி விஷயம் கேளு. அ.தி.மு.க., காரங்க "வாட்ஸ் ஆப்' குரூப் வெச்சிருக்காங்க. மீட்டிங், கட்சி தலைமை அறிவிப்பு, மினிஸ்டர் புரோகிராம்னு ஏதாச்சும் தகவல்களை, போட்டோவுடன் இதில் போட்டு வருவாங்க. இரண்டு அணி ஆன பிறகு, இரண்டு தரப்பும் தகவல்களை போட்டி போட்டு பதிவு
செஞ்சிட்டு இருந்தாங்க,'' என்று மித்ரா கூறி, பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தாள்
"" அடடே! இப்ப குரூப் எந்த கதியில் இருக்கு,'' என்று, ஆர்வத்தோடு சித்ரா கேட்டாள்.
""இப்ப, என்ன போடறதுன்னே கட்சிக்காரங்களுக்கு புரியல. எந்த செயல்பாடும் இல்லாம, "பாசிப்பயிறு பாயசம், வஞ்சிர மீன் வறுப்பது எப்படி'ன்னு, சமையல் குறிப்பு போட ஆரம்பிச்சுட்டாங்க,'' என்று வாய்விட்டு சிரித்தபடி மித்ரா கூறினாள்.
""ஆளுங்கட்சி மேட்டர் வேற ஏதாவது இருக்கா,'' என்று சித்ரா கேட்டாள்.
""பல்லடம் தொகுதியில இருக்கற மாநகராட்சி வார்டுல, உயர்கோபுர மின் விளக்கு திறப்பு விழா நடந்துச்சு. எம்.எல்.ஏ., ஆதரவாளருங்க யாரும் இல்லாததால், ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்தவங்க பெயரை போட்டு "பேனர்' வச்சுட்டாங்க. "நாங்களே ஓ.பி.எஸ்., அணிக்கு போயிட்டோம் எதுக்கு எங்க பேரை போட்டு பேனர் வைக்கறீங்க,'னு கேட்டு, சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க. "இன்னைக்கு நாம பிரிஞ்சிருந்தாலும், சீக்கிரமா ஒண்ணாயிடுவோம். இதைய கண்டுக்காதீங்கன்னு,' பேனர் வெச்ச நபர், சமாதானம் பண்ணினாராம்,'' என்று மித்ரா சொன்னாள்.
""மக்கள் பிரச்னையை கண்டுக்க நேரமில்லை: அவங்க கட்சி சண்டைக்கு தான் நேரமிருக்கு,'' என்று கூறிய சித்ரா, வண்டியை கிளப்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X