கால்நடை உதவியாளர் வேலைக்கு "கப்பம்' கல்குவாரி உரிமத்தில் பணம் சுருட்டி "ஏப்பம்'

Added : மே 24, 2017
Advertisement
ஏதோ, மழை வந்ததால், கொஞ்சம் நல்லாருக்கு,'' என்றவாறு, கூலாக, மித்ரா வீட்டு, போர்டிகோவில் அமர்ந்த சித்ரா, ""நம்ம மாவட்டத்திலே, பெஞ்ச் தேய்க்கும் இன்ஸ்பெக்டர்கள் பலர் இருக்க, நல்லா வேலை பார்த்திட்டு இருந்தவங்களில் சிலரை "டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க பார்த்தியா,'' என்று ஆரம்பித்தாள்.""குறிப்பிட்ட காலத்துக்கு வேலை செஞ்சா, "டிரான்ஸ்பர்' செய்யறது
கால்நடை உதவியாளர் வேலைக்கு "கப்பம்' கல்குவாரி உரிமத்தில் பணம் சுருட்டி "ஏப்பம்'

ஏதோ, மழை வந்ததால், கொஞ்சம் நல்லாருக்கு,'' என்றவாறு, கூலாக, மித்ரா வீட்டு, போர்டிகோவில் அமர்ந்த சித்ரா, ""நம்ம மாவட்டத்திலே, பெஞ்ச் தேய்க்கும் இன்ஸ்பெக்டர்கள் பலர் இருக்க, நல்லா வேலை பார்த்திட்டு இருந்தவங்களில் சிலரை "டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க பார்த்தியா,'' என்று ஆரம்பித்தாள்.
""குறிப்பிட்ட காலத்துக்கு வேலை செஞ்சா, "டிரான்ஸ்பர்' செய்யறது வழக்கந்தானே,'' என்று மித்ரா கேட்டாள்.
""அது சரி. ஆனா, உயர் அதிகாரிகள் மேல புகார் செஞ்சாக்கூட "டிரான்ஸ்பர்' செய்யறதை
என்னான்னு சொல்லறது,'' என்றாள் சித்ரா.
""அப்படி யாரு, என்ன காரணத்துக்கு மாற்றப்பட்டாங்க,'' என்று மித்ரா கேட்டாள்.
""சில கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிங்க ஆசியோட நடந்த சட்ட விரோத பார்கள் மீது, பல்லடம் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுத்தார். அதற்காக, அவருக்கு, "டிரான்ஸ்பர்' வழங்கியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""ஒழுங்கா வேலை பார்க்கிறதை விட, அதிகாரிகளுக்கு ஒத்துப்போகணும்கிறது தான், போலீஸ் துறையில் எழுதப்படாத சட்டமா இருக்கே,'' என்று, மித்ரா சலித்து கொண்டாள்.
""கலெக்டர் ஆபீசில, வாகனம் மாயாமான மேட்டர் தெரியுமா,'' என்று சித்ரா, அடுத்த விஷயத்துக்கு தாவினாள்.
""அட, கலெக்டர் ஆபீசிலயே திருடர்கள் கைவரிசை காட்ட ஆரம்பிச்சுட்டாங்களா,'' என்று மித்ரா ஆச்சரியமாக கேட்டாள்.
""அதில்லே. சமூக நலத்திட்ட துணை கலெக்டருக்கு, துறை மூலமா, "6060' பதிவெண் உள்ள ஜீப் இருக்கு. அதோட டிரைவர், சில மாசத்துக்கு முன்னால, வேறு துறைக்கு சென்றார். "ஸ்டியரிங்' பிடிக்க தெரிஞ்ச அலுவலக ஊழியர் ஒருத்தரை வெச்சு, ஜீப்பை ஓட்டியிருக்காங்க. ஆனா, முறையா பராமரிக்காம ஓட்டியதால், இன்ஜின் கோளாறாயிடுச்சு. அதுக்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவாகுமாம். கோவையில், ஒரு ஒர்க் ஷாப்பில் போய் நிறுத்தியிருக்காங்க. ஒரு மாசத்துக்கு மேலாகியும், வண்டி அங்கேயே இருக்காம்,'' என்றாள் சித்ரா.
""சரி, ஜீப் இல்லாம, துணை கலெக்டர் என்ன செய்யறார்,'' என்றாள் மித்ரா.
"" வேறு துறை வண்டியை பயன்படுத்திக்கிட்டு இருக்கறார். திட்ட அலுவலர் பயன்படுத்தின அம்பாசிடர் கார், பல மாசமாக பயன்படுத்தாமல், யூனியன் ஆபீஸ் வளாகத்தில், குப்பையோடு குப்பையா நிக்குது. அவருக்கு வேறொரு வண்டி இருக்கறதால, இதை கண்டுகல. இப்படியே போனா, சில மாசத்தில், அந்த காரும், சீக்கிரமே பேரீச்சம்பழத்துக்கு போடும் நிலைக்கு வந்துடும் போல,'' என்றாள் சித்ரா.
""பேனா பிடிக்கற வேலைக்கு லஞ்சம் கேக்குறாங்க; மாடு பிடிக்கற வேலைக்கும் பணம் கேட்கறாங்களேன்னு ஒரே புகாராம்,'' என்று மித்ரா, கால்நடைத்துறைக்கு தாவினாள்.
""கால்நடை பராமரிப்புத்துறை வேலையா இருந்தாலும், அரசாங்க வேலையாச்சே? சும்மா கிடைக்குமா?'' என்றாள் சித்ரா.
""அட, கரெக்டா கண்டுபிடிச்சிட்ட. மாடு பிடிக்கற வேலைக்கும், நான்கு "எல்' கேட்டிருக்காங்க. மாவட்ட அளவில், "இன்டர்வீயூ' மட்டும் தான்; மத்தபடி நியமனம் எல்லாம், சென்னையில் தான் நடக்குது. நேர்காணலுக்கு போனவங்க, வழக்கம் போல், ஏஜென்ட் மூலமாக பேசியிருக்காங்க. சென்னைக்கு, நாலு "எல்', லோக்கலுக்கு ஒண்ணு; மொத்தம், ஐந்து வேணும். கொஞ்சம் குறைச்சு, 4.50 "எல்' கொடுக்கலாம்'னு கறாரா கேட்டிருக்காங்க. இதை கேட்டு, சாபம் விடாத குறையா, புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""கலெக்டர் ஆபீசுல காத்திருக்கறவங்க முடிவும், இதே மாதிரி தான் இருக்கு,'' என்றாள் சித்ரா.
""என்னது, கலெக்டர் ஆபீசிலே காத்திருக்காங்களா? என்ன விஷயம்?''என்று ஆர்வமாக கேட்டாள் மித்ரா.
""மாநில அளவுல, தாசில்தார் நிலையில் இருந்த, 40க்கும் மேற்பட்டவங்களுக்கு, துணை கலெக்டராக பதவி உயர்வு கெடைச்சிருக்கு. இதனால, துணை கலெக்டர் நிலையில இருந்தவங்க, இடமாற்றம் செய்யப்பட்டாங்க. அதுல, சிலரை காத்திருப்போர் பட்டியலில் வெச்சிருக்காங்க. பதவி உயர்வு "சீனியாரிட்டி'யில வந்திரும்; ஆனால, பிடிச்ச இடத்துக்கு மாறுதல் வேணும்னா, "கப்பம்' கட்டித்தான் ஆகனுமாம். அதுக்காகத் தான், "வெயிட்டிங் லிஸ்ட்'லே வச்சிருக்காங்க. ஆனா, காத்திருப்போர் பட்டியலில் இருக்கறவங்களோ, "இதுக்கெல்லாம், ஐந்து லட்சம்; பத்து லட்சம் கொடுக்க முடியாது; எப்படியிருந்தாலும்
சம்பளம் வந்துட்டுத்தானே இருக்கும்'னு சொல்லி, ஜாலியா இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""அமைச்சர் கூட மோதிட்டு போனவரு, மறுபடியும் வந்துட்டாரு தெரியுமா?,'' என்று
மித்ரா கூறினாள்.
""அது யாரு?,'' என்று சித்ரா கேட்டாள்.
""கனிமவளத்துறை அதிகாரி, 2011ல் அமைச்சர் கூட ஏற்பட்ட மோதலில், "டிரான்ஸ்பர்' ஆனாரு. ரொம்ப நாள் முட்டிமோதி, மறுபடியும் திருப்பூருக்கே வந்துட்டாரு. திருப்பூர்ல மட்டும், 50 "பாறைக்குழி'களுக்கு உரிமம் புதுப்பிக்க வேண்டியிருக்கு. "முக்கியமான' வேலை இருக்கறதால, மறுபடியும் "டாலர்' சிட்டிக்கே வந்திருக்கார்னு ஒரே பேச்சா இருக்குது,'' என்று மித்ரா கூறியுவுடன், ""அடிக்கடி "ஏப்பம்' விடும் சட்டநாதன் மாமாவை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. அவரை பார்க்க கௌம்பறேன்,'' என்ற சித்ரா, ஸ்கூட்டியை நோக்கி சென்றாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X