Ariviayalmalar | களை எடுக்கும் ரோபோ| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

களை எடுக்கும் ரோபோ

Added : மே 25, 2017 | கருத்துகள் (2)
Advertisement
களை எடுக்கும் ரோபோ

விவசாயத் துறையில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பல வேலைகளுக்கு தானியங்கி ரோபோக்களை மேற்கு நாடுகளில் விற்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு, மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் களை எடுத்தல் வேலையை செய்ய வந்திருக்கிறது, 'டெர்ட்டில்.'அமெரிக்காவிலுள்ள பிராங்ளின் ரோபாடிக்ஸ் இதை தயாரித்திருக்கிறது.வீட்டுத் தோட்டத்தில் இந்த இரு சக்கர ரோபோவை விட்டுவிட்டால், அதுவே, களைகளை வெட்டி சாய்த்துவிடும். தக்காளி, மிளகாய், பூச் செடிகளை அது ஒன்றும் செய்யாது. செடிகளை விட்டு, களைகளை மட்டும் வெட்டும்படி டெர்ட்டில் ரோபோவில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளும், உணரிகளும் பார்த்துக்கொள்கின்றன.
அதேபோல, தோட்டப் பகுதியை விட்டு இந்த ரோபோ தவறுதலாக வேறுபக்கமும் போகாது. சூரிய ஒளித் தகடுகள் பொறுத்தியிருப்பதால், இதற்கு மின் தேவையும் இல்லை. 2017 இறுதியில் சந்தைக்கு வரவிருக்கும், 18,000 ரூபாய் மதிப்புள்ள டெர்ட்டில் ரோபோவுக்கு இப்போதே ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva Kumar - Chennai,இந்தியா
25-மே-201708:14:18 IST Report Abuse
Shiva Kumar டேய்.. மெஷின் எல்லாம் போதும்... மனித ஆற்றலுக்கு வேலை கொடுத்து... அவர்களுக்கு சம்பளம் கொடுங்கள்... வேலை இல்லா திண்டாட்டம் தானே ஓடி ஒழிந்துவிடும் ......
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
26-மே-201700:30:38 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேசார் கேட்பது நியாயம் தான், ஆனால் இன்று... நூறு நாள் வேலை திட்டம் நடப்பதை பார்த்துள்ளீர் தானே,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X