'செல்பி பிள்ளை'...நடிகை உபசனா ஐயர்| Dinamalar

'செல்பி பிள்ளை'...நடிகை உபசனா ஐயர்

Added : மே 25, 2017
'செல்பி பிள்ளை'...நடிகை உபசனா ஐயர்

சுண்டி இழுக்கும் கருவண்டு கண்கள். புருவங்கள் வில்லாய் வளையும் அழகு. நவரசம் பொங்கும் இவரது நடிப்பை பார்த்தாலே பழ ரசமாய் இனிக்கும். இத்தனை வர்ணனைக்கும் உரிய நடிகை உபசனா ஐயருடன் பேசியதிலிருந்து...* உங்களை பற்றி...படித்தது 'பிசினஸ் எக்கானமி'. பிறந்து கொஞ்ச நாள் டில்லியிலும், பின் சென்னையிலும் வளர்ந்தேன். இப்போ எல்லாமே எனக்கு சென்னை தான்.* ரங்கூன் படத்தில் நடித்தது பற்றி?கவுதம் கார்த்திக் கூட நடித்தேன். படப்பிடிப்பு நடந்த நாட்களை மறக்க முடியாது. சினிமா தவிர, விளம்பர படங்களிலும் நடிச்சுட்டு இருக்கேன். அப்புறம், எனக்கான கதைகளை தேடிட்டு இருக்கேன்.* '‛நம்ம சென்னை' பற்றி?உதவி பண்றது தப்பில்லையே. 'நம்ம சென்னை'ன்னு நாங்க ஒரு குழுவா இருக்கோம். அது மூலமா கஷ்டப்படுறவங்களுக்கு நிறைய உதவிகள் செய்துட்டு வர்றோம். வெள்ளம் வந்தப்போ உதவி பண்ணினோம். அனாதை இல்லத்துல முதியோர்களுக்கு சாப்பாடு கொடுக்குறது, வேறு சில உதவிகளை பண்றதுன்னு பிசியா இருக்கோம்...* நடிப்பு மட்டும் தானா?பரதநாட்டியம் தெரியும். நிறைய மேடைகளில் அரங்கேற்றம் பண்ணியிருக்கேன். இப்போ, மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனம் ஒன்றையும் நடத்திட்டு இருக்கேன். நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி வர்றேன்.* ஆண்களுக்கு மத்தியில் சாதிக்க முடியுமா?நிச்சயமா சாதிக்க முடியும். நேர்மையும், பொறுமையும் இருந்தா, எந்த துறையிலும் பெண்கள் சாதிக்கலாம்.* நீங்க 'செல்பி' புள்ளையாமே..ஆமாங்க. அப்பப்போ, செல்பி எடுத்து 'பேஸ்புக்', 'வாட்ஸ் ஆப்'ல போட்டிருவேன். என்னை நானே 'செல்பி' எடுக்குறது ரொம்ப பிடிக்கும்.* 'மிஸ் சென்னை' பட்டம் ?அது 2014ல் வாங்கினேன். தவிர, மிஸ் பியூட்டிபுல் ஸ்மைல், அப்புறம் பரதநாட்டியம், யோகாவுலயும் விருது வாங்கியிருக்கேன்.* சினிமா தான் முடிவு பண்ணிட்டீங்களா?இல்லை, எனக்குனு லட்சியம் நிறைய இருக்குங்க. என்னோட கம்பெனிய வெற்றிகரமா நடத்தணும். கஷ்டப்படுறவங்களுக்கு நிறைய உதவணும்.* இளைஞிகளுக்கு...பொறுமையும், தன்னம்பிக்கையும் பெண்களிடம் அவசியமா இருக்கணும். அது இருந்தாலே போதும். நீங்க எப்படி வாழணும்னு நினைக்கிறீங்களோ அப்படி வாழ்வீங்க.upasanaiyericloud.com



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X