சிரித்து வாழ வேண்டும் - சிரிக்கும் வையாபுரி| Dinamalar

சிரித்து வாழ வேண்டும் - சிரிக்கும் வையாபுரி

Added : மே 25, 2017
சிரித்து வாழ வேண்டும் - சிரிக்கும் வையாபுரி

நகைச்சுவை நடிப்பின் மூலம் சினிமாத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்... தேனியை சேர்ந்த நடிகர் வையாபுரி. தினமலர் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து....* தேனி டூ சென்னை எப்படிபடிப்பு சரியாக வரலை. குலத்தொழில் ஏதுமில்லை. தேனியில் நண்பர்கள், உறவினர்களுடன் பேசி பொழுது போக்கும் நேரங்களில் சிரிப்பு வரவழைக்கும் என் பேச்சை கேட்பவர்கள், 'சென்னைக்கு போனால் சினிமா வாய்ப்பு கிடைக்கும்,' என்ற ஐடியா தான் சென்னைக்கு வர வைத்தது.* சினிமாவில் வாய்ப்புசினிமாவிற்கு வந்தது பெரிய போராட்டம். அதையே ஒரு சினிமாவாக எடுக்கலாம். கால்கள் தேய்ந்து, செருப்பு தேய்ந்து, உடலும் தேய்ந்து என சொல்வார்களே அப்படி வாய்ப்பு கிட்டும் வரை நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அதிகம். அந்த காலத்தில் துார்தர்ஷனின் எழுத்தாளர் ஆர்.கே. நாராயண் எழுதிய 'மால்குடி டேஸ்' நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. பிறகு எழுத்தாளர் சுஜாதாவின் 'கொலையுதிர் காலத்தில்' நடிகர் விவேக்குடன் இணைந்து நடித்தேன். அந்த காலகட்டத்தில் சீரியல்கள் தயாரித்த தேவராஜ், தான் இயக்கிய 'இளையராகம்' படத்தில் வாய்ப்பு தந்தார்.* நிலைத்து நிற்க வைத்தது?பிறகு 'மாணிக்கம்' படத்தில் நடித்தேன். 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் என்னை நிலைத்து நிற்க வைப்பதாக அமைந்தது. பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், பெண்ணின் மனதை தொட்டு, மனசெல்லாம், பூவெல்லாம் உன் வாசம் என அடுத்தடுத்து படங்கள் அமைந்தன.* நடித்துள்ள படங்கள்?தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.* அஜித், விஜய் படங்களில் அதிகம் காண முடிகிறதே?இருவருடன் தலா 14 சினிமாக்களில் நடித்திருக்கிறேன். அந்தளவுக்கு இருவருக்குமே என் மீது ஒரு கனிவு.* தற்போதைய படங்கள்?விக்ரம்பிரபுவின் பக்கா, அண்ணனுக்கு ஜே, அறியாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ., என படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.* பிடித்த காமெடி நடிகர்?நாகேஷ், சந்திரபாபு நடிப்பு பிடிக்கும். சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் டைமிங் ஜோக் அடிப்பதில் கவுண்டமணி சாரை அடிக்க ஆளில்லை.* மறக்க முடியாத பாராட்டு?நாகேஷ் சார் போல சிறந்த நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற முனைப்புண்டு. மும்பை எக்ஸ்பிரசில் நடிப்பை பார்த்து நாகேஷ் பாராட்டியது மறக்க முடியாது. நாகேஷ் சார் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நானும் உண்டு. ஆனால் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையாமல் போனது. மறுமலர்ச்சியில் சிறிய ரோலில் நடித்திருந்தேன். அதை பார்த்து நடிகர் மம்மூட்டி பாராட்டினார். தற்போது கூட அவரது படமொன்றில் நடித்து வருகிறேன்.* எதிர்கால ஆசை?சிறந்த கதாபாத்திர ரோல்களில் நடிக்கும் ஆசையிருக்கிறது. அந்த வாய்ப்பு விரைவில் அமையும்.* நடிகரானது விரும்பி தானாபுண்ணியத்தில் பெரிய புண்ணியம் பிறரை சிரிக்க வைப்பதுதான். அதை தான் செய்து கொண்டிருக்கிறேன். 'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என ஏற்கனவே தலைவரே (எம்.ஜி.ஆர்.,) பாடியிருக்கிறாரே.பாராட்ட actorvaiyapuri@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X