பாட்னா: ''நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரவேண்டும்; அவருக்கு உதவ, நான் தயாராக இருக்கிறேன்,'' என, பா.ஜ., - எம்.பி.,யும், நடிகரு மான, சத்ருகன் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.
யோசனை
நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா; தனிக்கட்சி துவங்குவாரா;பா.ஜ.,வில் சேருவாராஎன்பதுதான், தமிழகத்தில், இப்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பீஹார் மாநில, பா.ஜ.,
அதிருப்தி, எம்.பி.,யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, ரஜினிக்கு அழைப்பு
விடுத்துள்ளார். பா.ஜ., தலைமை மீது அதிருப்தியில் உள்ள சத்ருகன் சின்ஹா,
'எந்த கட்சியிலும் சேர வேண்டாம்' என, ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி சத்ருகன் சின்ஹா கூறியிருப்பதாவது:
பாசத்துக்குரிய ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபட, இது சரியான நேரம். ரஜினி, அரசியலுக்கு வந்து, மக்கள் மற்றும் நாட்டின் நலனை காப்பாற்றுவதை பார்க்க, நாடே காத்துக் கொண்டிருக்கிறது. மக்கள், உங்களுடன் சேரத் தயாராக உள்ளனர். வேறு கட்சியில் சேருவதற்கு முயற்சிக்கவேண்டாம்.
உதவத் தயார்
குடும்பத்தார்,
நெருங்கியவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் கலந்து பேசி, விரைவில்
சரி யான முடிவை எடுப்பீர்கள் என, நம்புகிறேன். நண்ப னாக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக,
எப்போதும் நான் உங்கள் பக்கம் இருப்பேன். எந்த நேரத்திலும், உங்களுக்கு உதவத் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சத்ருகன் சின்ஹா, பழைய ஹிந்தி படங்களில் ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரை பின்பற்றியே, தானும், ஸ்டைலாக நடித்ததாக, ஏற்கனவே ரஜினி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (46)
Reply
Reply
Reply