புதுடில்லி: ''ரேடியோ உரையின் மூலம், நாட் டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பின ராகி விட்டேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, உருக்கமாக பேசினார்.
'மன் கீ பாத்' என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோ மூலம் உரையாற்றி வரு கிறார். இந்த நிகழ்ச்சியை விமர்சித்து, எதிர்க் கட்சிகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. மோடி தலைமையிலான அரசு மூன்றாண்டு களை நிறைவு செய்துள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று ஒலிபரப்பான ரேடியோ உரையில், பிரதமர் மோடி பேசிய தாவது:
சாதாரண மனிதன்
கடந்த, 2014, அக்டோபர், 2ல், இந்த ரேடியோ நிகழ்ச்சியை துவக்கியபோது, மக்களுடன் நேரில் பேசுவதற்கான வாய்ப்பாகவே கருதி னேன். நானும் ஒரு சாதாரண மனிதன் தான். நல்லது, கெட்டது என்பதால், நானும் பாதிக்கப் படுகிறேன்.இந்த ரேடியோ உரையின் மூலம், என் கருத்துக் களை மட்டுமே எடுத்து வைப்ப தாகவும், மக்களின் கருத்தை அறிந்து கொள்வ தில்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை துவக்கியபோது, அரசியல் ரீதி யான விமர்சனங்கள் வரும் என, நான் எதிர் பார்க்க வில்லை. என் வீட்டில், என் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதைப் போலவே, இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராகி விட்டேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
இந்த ரேடியோ உரை குறித்து,
பல்வேறு மக்கள்
தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை
பேசியபோது, புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை
வைத்தேன்.
அதன்படி, தாங்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயங் கள் குறித்து, மக்கள் எனக்கு பதில் அனுப்பி
வருகின் றனர்.இந்த ரேடியோ நிகழ்ச்சியை, மக்களுடன் பேசு வதற்கான வாய்ப்பா கவே
பார்க்கிறேன்.
என் ரேடியோ உரைகள் குறித்த ஆய்வு கட்டு ரைகள் கொண்ட
நுாலை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சமீபத்தில் வெளியிட்டார். ஒரு சாதாரண
மனி தனை, ஊக்குவிக்கும் நிகழ்ச்சி யாகவே இதை பார்க்கிறேன்.இது, மன் கீ பாத்
நிகழ்ச்சிக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது.
அபுதாபியைச் சேர்ந்த அக்பர் என்பவர், ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல், இந்த புத்தகத்துக்கு தேவை யான ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளார். அவருக்கு என் நன்றி.
துாய்மை இயக்கம்
வரும், ஜூன், 5ம் தேதி உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும், 4,000 நகரங்களில் மிகப் பெரிய அளவில் துாய்மைப் பணிகள் மேற் கொள்ளப்படும். மாநில அரசுகள், மக்களின் ஒத்து ழைப்போடு, இதை மேற்கொள்ள திட்டமிட்டுள் ளோம்.
நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய வீர சாவர்க்கரின் பிறந்த நாளான இன்று, சுதந்திரத் துக்காக போராடிய தியாகிகளை நினைவில் கொள்ள வேண்டும். அந்தமான் - நிகோபார் தீவு களில் உள்ள சிறைகளை பார்த்தால், எவ்வளவு கொடுமையை அவர்கள் அனுபவித்தனர்என்பது புரியும்.
மூன்றாவது சர்வதேச யோகா தினம், வரும், ஜூன், 21ல் உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் உதவிட வேண்டும். யோகா தினத்தை சிறப்பிக்கும் வகை யில், யோகா மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கிய மாக வாழ முடியும் என்பதை காட்டுவதற்காக, மூன்று தலைமுறையினர் கொண்ட, 'செல்பி'
படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
விமர்சனங்களுக்கு நன்றி!
ரேடியோ உரையில், பிரதமர் மோடிமேலும் கூறியதாவது: மத்திய அரசு மூன்று ஆண்டு களை நிறைவு செய்துள்ளது. இது
குறித்து, பல்வேறு ஊடகங்கள், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது உட்பட,
அரசின் செயல் பாடுகள் குறித்த ஆய்வுகளை, மதிப்பீடுகளை வெளி யிட்டுள்ளன.
விமர்சனங்களே, ஜனநாய கத்தை வலுப்படுத்தும். அதன்படி,
பாராட்டிய வர்களுக்கும், சுட்டிக்காட்டியவர்களுக்கும் நன்றி. இதன் மூலம், மேலும் சிறப்பாக செயல் பட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாடு பயணம்
ஆறு நாள் பயணமாக, நான்கு நாடுகளுக்கு, பிரதமர் மோடி, இன்று புறப்பட்டுச் செல்கிறார்.
டில்லியிலிருந்து இன்று புறப்படும் பிரதமர் மோடி, முதலாவதாக, ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு செல்கிறார். அங்கு, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லை சந்தித்து பேசுகிறார்.
ஜெர்மன் அதிபர் பிராங் வால்டரையும், மோடி சந்தித்து பேசுகிறார். இந்தப் பயணத்தின் போது, இந்தியா - ஜெர்மனி இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.இதன் பின், பிரதமர் மோடி, ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மரினோ ராஜோயை சந்தித்து பேசுகிறார். ஸ்பெயின் மன்னர், 6-ம் பிலிப்பையும் சந்தித்து பேசுகிறார். ஸ்பெயின் தொழிலதிபர்களையும், மோடி சந்திக்கிறார்.
இதை தொடர்ந்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வுக்கு செல்கிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடக்கும்,இந்திய-ரஷ்ய உச்சி மாநாட் டில் பங்கேற்கிறார்; இதில் ரஷ்ய அதிபர் விளாடி மிர் புடினும் பங்கேற்கிறார். பீட்டர்ஸ் பர்க் நகரில், அடுத்த மாதம், 2ல், சர்வதேச பொருளா தார மாநாடு நடக்கிறது. இதில், சிறப்பு விருந்தி னராக மோடி பங்கேற்கிறார்.இதைதொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, புதிய அதிபர் மக்ரோனை யும் சந்திக்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (23)
Reply
Reply
Reply