பொது செய்தி

தமிழ்நாடு

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு

Added : மே 29, 2017
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், திரவுபதியம்மன் கோவில் வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நடந்தது. இதை, 1,000க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழா, கடந்த, 10ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 13 நாட்கள், கோவில் வளாகத்தில், மகாராஜகடை திருமலை நாடக சபாவினரின் மகாபாரத நாடகம் நடந்தது. நாடகத்தின் இறுதி நாளான நேற்று, 18ம் போர் குறித்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, காலை, 10:00 மணிக்கு நடந்தது. இதை காண, பாப்பாரப்பட்டி, தொன்னைகான் கொட்டாய், சவுளூர், பாறையூர், கெட்டூர் மற்றும் தண்டேகுப்பம் கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்தனர். மாலை, 6:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், தீ மிதிவிழா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X