அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய அரசின் 'வெற்றி கதைகள்'
தயாரிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: 'மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, வெற்றிக் கதைகள் தயாரித்து அனுப்ப வேண்டும் என, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களான, பி.ஆர்.ஓ.,க்களுக்கு, செய்தித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளது, அத்துமீறிய செயல்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு, வெற்றி கதைகள், தயாரிப்பு, ஸ்டாலின், கண்டனம், பி.ஆர்.ஓ, தி.மு.க., குடிநீர் பிரச்னை, பெண்கள், Government, Winning Story, Stalin, PRO, DMK, Women, Drinking water problem, Condemned


அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும், குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. மதுக்கடைகளை எதிர்த்து, பெண்கள் தன்னெழுச்சியாக போராடுகின்றனர்.

இது குறித்த தகவல்களை திரட்டி, அரசுக்கு கொடுத்து, மக்களின் குறைகளை தீர்க்க, செய்தித் தொடர்புத் துறைமுன்வரவில்லை.

அத்துமீறிய செயல்ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, 'வெற்றிக் கதைகள்' தயாரித்து, அதை கலெக்டர்களின் ஒப்புதல் பெற்று, அனுப்பி வைக்க வேண்டும் என, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு, செய்தித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருப்பது அத்துமீறிய செயல்.மாநில அரசின் திட்டங்களை,மக்களுக்கு விளம்பரம் செய்யவே, மாநில செய்தி தொடர்புத் துறை உருவாக்கப்பட்டது.

சரியல்ல


மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ய, 'பிரஸ் இன்பர்மேஷன் பீரோ' என்ற அமைப்பு, மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.

Advertisement

அ.திமு.க., அரசின் கீழ் உள்ள செய்தித் தொடர்புத் துறை, மத்திய அரசின் வெற்றிக் கதைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சரியல்ல.
இந்த ஆட்சி எந்த அளவிற்கு, மத்திய அரசின் பிடியில் சிக்கி, மாநில உரிமைகளை பறிகொடுத்து நிர்கதியாக நிற்கிறது என்பதையே, இது காட்டுகிறது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மே-201723:52:13 IST Report Abuse

ரங்கன்தமிழன் பேச்சாலயே கெட்டான்....வீர வசனம் எழுதியே ஊரை ஏமாற்றியவர்கள், இன்று ஆட்சியில் இல்லாத வயற்றிச்சலில் இபடியெல்லாம் பேசுகிறார்கள்...

Rate this:
30-மே-201722:06:54 IST Report Abuse

Kumar.D.Kin fact there has no role play from t.n. govt, things will continue like that , one find morning north guys will sit in T.N. Chief chair, which have ashame for Tamilians, pls think.

Rate this:
"????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா
30-மே-201718:59:15 IST Report Abuse

எல்லாம் நீயும் உன் குடும்பமும் அத்து மீறியதால் வந்த வினை

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X