அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி விழா அழைப்பிதழ்: கனிமொழி பெயர் இல்லை

Added : மே 30, 2017 | கருத்துகள் (15)
Advertisement
கருணாநிதி விழா  அழைப்பிதழ்: கனிமொழி பெயர் இல்லை

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்ட சபை பணி வைர விழா அழைப்பிதழில், கனிமொழி பெயர் இல்லை.கருணாநிதியின், 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை பணி வைர விழா, ஜூன், 3ல், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது.

தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், விழாவுக்கு தலைமை வகிக்கிறார். செயல் தலைவர், ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார். காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர், லாலுபிரசாத் யாதவ், தேசியவாத காங்., தலைவர், சரத்பவார், முன்னாள் மத்திய அமைச்சர், பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் நன்றி கூறுகிறார் என, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி., மற்றும் மகளிரணி செயலராக உள்ள கனிமொழி பெயர் இடம்பெறவில்லை. இது, அவரது ஆதரவு வட்டத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.அதேபோல, விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள, தமிழக காங்., தலைவர் திருநாவுக்
கரசர் பெயரும், அழைப்பிதழில் இடம்பெறவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
30-மே-201720:09:54 IST Report Abuse
Pasupathi Subbian இருப்பதை வைத்து இன்னமும் மூன்று தலைமுறைக்கு கவலைப்படாமல் வாழலாமே. அரசியலில் என்ன அவசியம். அதான் குடும்ப வாழ்வு சரியாக அமையவில்லை. மற்றபடி, வருமானத்துக்கு ஆங்காங்கே இருக்கும் சொத்துக்களில் இருந்து வருமானம், சாராய தொழில்சாலைகளில் இருந்து வருமானம், என்று போதிய வசதிகள் கிடைத்தும் , அரசியலில் குதிக்கவேண்டிய அவசியம் என்ன. இருக்கும் சொத்துக்களுக்கு , அண்ணனிடம் பாதுகாப்பு கேட்டால் கொடுப்பார்க்கு தாயாராக உள்ளார், ஆனால் , இருக்கும் அரசியலில் பங்கு கேட்டால் , கொடுப்பதர்க்கு தயார் இல்லை என்பதே உண்மை. இத்தனை நாட்களாக தாயாரின் ஆதரவு, தகப்பனை மிரட்டி பணியவைத்தது, ஆனால் இன்றோ அது செல்லாததாகிவிட்டது. அதிகம் மிரட்டினால் , அது திரும்பி விடும் அபாயம் உண்டு. நிலைமையை அனுசரித்து , இருப்பதே சால சிறந்தது. அதை விடுத்து தானும் , உரிமை என்று போவது ஆபத்தில் முடியும் சந்தர்ப்பம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
30-மே-201714:24:17 IST Report Abuse
Harinathan Krishnanandam நட்பும் உறவும் என்று அழைப்பிதழில் பின் பக்கம் அச்சடிக்கப்பட்டு உள்ளது என்று ஒரு குருவி சொல்கிறது
Rate this:
Share this comment
Cancel
30-மே-201713:02:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நான் சொல்லல , கருணாநிதிக்கு பிறகு இந்த கட்சி மூன்றாக உடையும் என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X