பொது செய்தி

இந்தியா

ஆக்ராவில் ஆண்கள் முகத்தை மூட தடை

Added : மே 30, 2017 | கருத்துகள் (21)
Advertisement
ஆக்ரா, ஆண்கள், முகம், துணி, ஹெல்மட்,கமிஷனர் ராம்மோகன் ராவ், உ.பி., Uttar pradesh,  Helmet, Agra, Commissioner Ramamohan roa, Gents

ஆக்ரா: உ.பி., மாநிலம் ஆக்ராவில், 18 வயது முதல் 30 வயது வரை உள்ள ஆண்கள் பொது இடங்களில் முகத்தை மூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில், பெண்கள் பொது இடங்களிலும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் துணியை கொண்டு முகத்தை மூடி செல்கின்றனர். தூசு பிரச்னை மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதுபோல் செய்கின்றனர்.
இதே பாணியை தற்போது ஆண்களும் பின்பற்ற துவங்கி விட்டனர். குறிப்பாக, உ.பி., மாநிலம் ஆக்ரா, மதுரா உள்ளிட்ட நகரங்களில் இந்த போக்கு காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஆக்ரா டிவிஷனல் கமிஷனர் ராம்மோகன் ராவ் கூறியதாவது:மதுரா அருகே முகமூடி கொள்ளையர்கள் நகை கடையை கொள்ளையடித்ததுடன், இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். இதே போல், பிரோசாபாத் அருகே தொழில் அதிபர் ஒருவரை சிலர் கடத்தி சென்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியபடி செல்வது காணப்படுகிறது.
எனவே, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில், 18 வயது முதல், 30 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தங்கள் முகத்தை மூடியபடி பொது இடங்களில் நடமாட கூடாது. மேலும், சாலையில் நடந்து செல்லும் போது ஹெல்மட் அணிந்தபடி செல்ல கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-மே-201716:08:27 IST Report Abuse
Endrum Indian முகத்தை மூடக்கூடாது ஆண். அய்யோ அதை பெண் செய்தால் அது விலக்கு. ஆணுக்கு பெண் சரி சமம் இங்கே தோற்று விட்டது. இந்த வெய்யிலிலும் முஸ்லீம் பெண்கள் கருப்பு புர்க்காவில்? உடல் தந்தூரி (சிக்கன்) மாதிரி பதமாக வெந்து போகும்.
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
30-மே-201715:38:44 IST Report Abuse
பொன் வண்ணன் சும்மா சொல்லக்கூடாது.. பிஜேபி காரனுங்க டிசைன் டிசைனா யோசிக்கறாங்க.. ஒரு நோபல் பரிசே கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
30-மே-201713:56:18 IST Report Abuse
Ab Cd அப்படியே சூரியனுக்கும் சூட்டை குறைக்கச் சொல்லி ஒரு உத்தரவு போடுங்கள்
Rate this:
Share this comment
abdul rajak - trichy,இந்தியா
30-மே-201715:11:52 IST Report Abuse
abdul rajakசூரியன் தன் சக்தியை இழக்க தொடங்கி 1000 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது . சூரியன் தன் ஆயுள் காலத்தில் பாதியை தாண்டி விட்டது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X