ஆக்ராவில் ஆண்கள் முகத்தை மூட தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆக்ராவில் ஆண்கள் முகத்தை மூட தடை

Added : மே 30, 2017 | கருத்துகள் (21)
ஆக்ரா, ஆண்கள், முகம், துணி, ஹெல்மட்,கமிஷனர் ராம்மோகன் ராவ், உ.பி., Uttar pradesh,  Helmet, Agra, Commissioner Ramamohan roa, Gents

ஆக்ரா: உ.பி., மாநிலம் ஆக்ராவில், 18 வயது முதல் 30 வயது வரை உள்ள ஆண்கள் பொது இடங்களில் முகத்தை மூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில், பெண்கள் பொது இடங்களிலும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் துணியை கொண்டு முகத்தை மூடி செல்கின்றனர். தூசு பிரச்னை மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதுபோல் செய்கின்றனர்.
இதே பாணியை தற்போது ஆண்களும் பின்பற்ற துவங்கி விட்டனர். குறிப்பாக, உ.பி., மாநிலம் ஆக்ரா, மதுரா உள்ளிட்ட நகரங்களில் இந்த போக்கு காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஆக்ரா டிவிஷனல் கமிஷனர் ராம்மோகன் ராவ் கூறியதாவது:மதுரா அருகே முகமூடி கொள்ளையர்கள் நகை கடையை கொள்ளையடித்ததுடன், இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். இதே போல், பிரோசாபாத் அருகே தொழில் அதிபர் ஒருவரை சிலர் கடத்தி சென்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியபடி செல்வது காணப்படுகிறது.
எனவே, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில், 18 வயது முதல், 30 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தங்கள் முகத்தை மூடியபடி பொது இடங்களில் நடமாட கூடாது. மேலும், சாலையில் நடந்து செல்லும் போது ஹெல்மட் அணிந்தபடி செல்ல கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X