பொது செய்தி

தமிழ்நாடு

இரு நாளில் தென்னிந்தியாவில் பருவமழை பெய்யும்

Added : மே 30, 2017 | கருத்துகள் (1)
Advertisement
தென்மேற்கு பருவமழை, வானிலை மையம், பாலசந்திரன், South west monsoon, monsoon, Balachandran, meteorology, Weather Center,  தமிழகம்,  பருவமழை, தென்னிந்தியா, South india

சென்னை: அடுத்த 2 அல்லது 3 நாளில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாளில் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் துவங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சிவகங்கை, குளச்சலில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திருவாடானை, நாகர்கோவிலில் 4 செ.மீ., மழையும், கமுதி, காரைக்குடி, பேச்சிப்பாறையில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
30-மே-201713:11:34 IST Report Abuse
mohan தமிழகத்தில் இன்று முதல் மழை... சொன்னால் வரமாட்டேங்குது.... சொல்லாட்டி மழை வருது... சொல்லாதீங்கப்பா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X