சரியாம விற்குது சரக்கு... தெரியாத ரகசியம் இருக்கு!

Added : மே 30, 2017
Share
Advertisement
சரியாம விற்குது சரக்கு... தெரியாத ரகசியம் இருக்கு!

பருவமழை துவங்கிவிட்ட ஆனந்தத்தில், சித்ராவும், மித்ராவும் அவிநாசி ரோட்டில் சாரல் மழையில் நனைந்தவாறே நடந்து சென்றனர்.
அங்கிருந்த தனியார் மருத்துவமனையைப் பார்த்த சித்ரா, ''அரசு மருத்துவமனையில ட்ரீட்மென்டுல இருக்கற, சயான் ஞாபகமிருக்கா?'' என்றாள்.
''சயானை மறக்க முடியுமா... கோடநாடு காவலாளி கொலையில சம்பந்தப்பட்டவர்தானே?''
''அதேதான். நீலகிரி எஸ்.பி., மிட்நைட்டுல சயானை சந்திச்சதுக்கு, இந்த ஆஸ்பத்திரில நடந்த ருசிகரமான சம்பவம் தான் காரணம்,'' என்று மர்மமாக சிரித்தாள் சித்ரா.
''அதென்ன சம்பவம்?''
''பிரைவேட் ஆஸ்பத்திரியில சிகிச்சையில் இருந்தப்போ, ரெண்டு தடவை நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா விசாரணை நடத்துனாரு. அப்ப அங்க வந்த, 'டிவி' ரிப்போர்ட்டர்ஸ், பேட்டி எடுக்கிறோம் பேர்வழின்னு, எஸ்.பி.,யோட மூக்கு, வாய்க்குள்ளே, 'மைக்கை' நீட்டிட்டாங்களாம். இதனால பத்திரிகை நிருபர்களை தவிர்க்கறதுக்காகத்தான், அரசு மருத்துவமனைக்கு நடுராத்திரி வந்து விசாரணை நடத்திட்டு போயிருக்காரு,'' என்றாள் சித்ரா.
''செம மேட்டரு,'' என்று வாய் விட்டு சிரித்த மித்ரா, ''கடந்த வாரம் ஒரு மில்லுல, 18 கோடி ரூபா ஏமாத்தி மோசடி செஞ்சுட்டதா, குற்றப்பிரிவு போலீசில ஒரு வழக்கு பதிவாச்சு. இந்த கேசுல கைதானவங்கள ஜெயில்ல அடைக்க, குற்றப்பிரிவு போலீசுக்கு மனசு வரல. அவங்க தரப்புல நல்லா கவனிச்சிருப்பாங்க போல,'' என்றாள்.
''ம்ம்... அப்புறம்?''
''இதனால, குற்றவாளிங்களுக்கு ஆதரவா செயல்பட்டிருக்காங்க. அப்புறமா நீண்ட இழுபறிக்கு அப்புரமா, அவங்கள ஜெயில்ல அடைச்சிருக்காங்க... இப்ப போலீஸ் வட்டாரத்துல இதான் ஹாட் டாபிக்,'' என்றாள் மித்ரா.
பேசியபடியே இருவரும், ரேஸ்கோர்ஸ் பகுதிக்குள் நுழைந்தனர். ''காலைல 'வாக்' போக முடியலை... வர்றியா ரெண்டு ரவுண்டு போகலாம்,'' என அழைத்தாள் சித்ரா.
''ஓகே... மழையும் நின்னுருச்சு... வா,'' என்று நடக்க ஆரம்பித்த மித்ரா, ''நம்மூர்ல போன வருஷம் மழை இல்லாததால, பயிர் சாகுபடி குறைந்து போயிருச்சாம். ஏல சந்தைகள்ல காய்கறி வரத்தும் குறைஞ்சு போயிருக்கு. அதே நேரம், உழவர் சந்தையிலயும் காய்கறி வரத்து குறைஞ்சுருச்சாம். காய்கறி வியாபாரிங்க பலபேரு, உழவர் சந்தையில வியாபாரம் செய்றதுதான் காரணம்னு சொல்றாங்க,'' என்றாள்.
அதற்கு சித்ரா, ''வியாபாரம்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. மூடுன 'டாஸ்மாக்' கடைகள்ல சரக்கு சேல்ஸ் ஜோரா நடக்குது. போலீசுக்கும் நல்லா மாமூல் போகுது. இதனால, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காம, மூடுன கடைகள்ல சரக்கு விற்கிறதா, பார் ஓனர்கள் மேல கேஸ் போட முடிவு செஞ்சிருக்காங்க,'' என்றாள்.
''இன்னொரு தகவல் கேள்விப்பட்டியா மித்து... இப்பதான் தெருமுக்குல்லாம் கூட்டம் கொறஞ்சு, சண்டை சத்தமில்லாம இருக்குன்னு, நிம்மதியா இருந்தோம். ஆனா, துாறல் விட்டும் விட்டும், துாவானம் நிக்கலைனு கதையாகிப்போச்சு,'' என்றாம் சித்ரா.
அதற்கு மித்ரா, ''நீ எதைச் சொல்ற... டாஸ்மாக் கடையெல்லாம் மூடுனாங்களே, அதையவா?''
''ஆமா, கடைங்க பாதியா கொறஞ்சும், கல்லா நெறஞ்சுதான் கெடக்காம். டாஸ்மாக் அதிகாரிங்க கமுக்கமா சொல்றாங்க!''
அதற்கு மித்ரா, ''அதெப்படி? அதான் தெற்கு வடக்குன்னு மொத்தமிருந்த, 283 கடையில, 155 கடைய மூடிட்டாங்களே... வருமானமெல்லாம் பாதியாக் குறைஞ்சிருக்குமே,'' என்றாள்.
''அதான் இல்லையாம். கடைங்க பாதியா கொறஞ்சது உண்மைதான். ஆனா, வருமானம், 10 சதவீதம் கூட சரியலையாம். அப்போ, 7 கோடி ரூபாய்க்கு வித்தது. இப்போ 6 கோடி ரூபா; அம்புட்டுதான்,'' என்று சிரித்தாள் சித்ரா.
''ஹேய்... வாட் ஏ மிராக்கிள். இதெப்படி சாத்தியம்... ஒண்ணும் புரியலையே!''
அதற்கு சித்ரா, ''அட மக்கு... இந்த 'பார்' ஓனருங்கல்லாம், மூடுன கடையிலருந்து 'பிளாக்குல' நிக்காம சரக்கு ஓட்டுறாங்களாம். திறந்துருக்குற கடையில சேல்ஸ் ஆனதா, கணக்கு எழுதிக்குறாங்களாம்,'' என்றாள்.
''ஆக, வருமானமும் குறையல; அதனால, மாமூல் மழையும் நிக்கலைங்கறே அப்படித்தானே? இவங்கள்லாம் எப்போதான் திருந்தப்போறாங்களோ?'' என்று சலிப்புக் காட்டினாள் மித்ரா.
ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்ததால், இருவரும் திட்டசாலை வழியாக வாக்கிங் ரூட்டை மாற்றினர். இந்து அறநிலைத்துறை அதிகாரி வீட்டை பார்த்த சித்ரா, ''சஸ்பெண்ட் ஆன அறநிலைத்துறை அதிகாரிய ஞாபகமிருக்கா மித்து... ரிட்டையர் ஆகறதுக்கு முன்னே, சஸ்பெண்ட் ஆவார்னு அன்னிக்கு பேசினோமே...'' என்றாள்.
''ஆமா... நாம பேசின மாதிரியே, சஸ்பெண்ட் ஆயிட்டாரு. சஸ்பெண்டுக்கு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் நகைல, இவர் விளையாடுன கேஸ் இன்னும் முடியாததுதான் காரணமாம். இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள் இருக்காம். விசாரிச்சு ஆக்ஷன் எடுக்க, மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்காம்,'' என்று கூடுதல் தகவல் கொடுத்தாள் மித்ரா.
''எங்க ஏரியா கவுன்சிலர் பரிதி வீட்டு கல்யாணத்துக்கு நாளைக்கு போகணும்,'' என்று சம்பந்தமில்லாமல் பேசினாள் சித்ரா.
ரேஸ்கோர்ஸ் தாமஸ்பார்க் பகுதிகளில் பாழடைந்து கிடந்த வீடுகளை பார்த்த மித்ரா, ''இதுக்கு முன்னால இருந்த, வீட்டு வசதி வாரிய இ.இ., - கலெக்டர் அலுவலக கூட்டத்துல, பேசுன பேச்சுதான் அவரோட டிரான்ஸ்பருக்கு காரணமாம்,'' என்றாள்.
அதற்கு சித்ரா, ''நானும் கேள்விப்பட்டேன். தகவலை கேட்டவுடன் ஷாக் ஆகிட்டாராம். உடனே வாரிய செயலாளரு, எம்.டி.,க்கு பேசியும் கைவிரிச்சுட்டாங்களாம்,'' என்றாள்.
''அது மட்டுமில்ல, பழைய இ.இ., சாயங்காலம் ரொம்ப நேரம் ஆனாலும், பெண் பணியாளர்களை அலுவலக அறைக்குள்ளே வச்சு பேசிட்டிருப்பாராம். டூட்டி நேரத்துல யோகா, வாக்கிங் போவாராம். இதை தவிர வீடு ஒதுக்கீடு அது, இதுன்னு நெறய புகார் சேர்ந்தது. ைஹலைட்டா கலெக்டர் கூட்டத்துல பேசி மாட்டிக்கிட்டார்னு கேள்விப்பட்டேன்,'' என்றாள் மித்ரா.
''அவருக்கு பதிலா சென்னையில் இருந்து வந்துருக்கற, புது இ.இ., பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?'' என்றாள் சித்ரா.
''இவரு இணக்கமா போற ஆளுன்னு பேசிக்கறாங்க. போக போகத்தான் தெரியும்,'' என்றாள் மித்ரா.
''பொலிட்டிக்கல் மேட்டர் ஏதாவது இருக்கா மித்து?'' என்று கேட்டாள் சித்ரா.
''ம்ம்... தி.மு.க.,காரங்க மேடையில மட்டும் வாய் கிழிய திராவிடம் பேசுவாங்க. ஆனா, ஓட்டு அரசியல்னு வரும்போது, எல்லாத்தையும் மறந்து, நெத்தி நிறைய திருநீறு பூசிக்குவாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிங்கை தொகுதி எம்.எல்.ஏ., நிதியில கட்டிய, தடுப்பணை மதகுகளை, உடன்பிறப்புகள் ஒன்று சேர்ந்து, வாழை மரம், பூ தோரணம் கட்டி, ரிப்பன் வெட்டி திறந்து வச்சாங்க; தி.மு.க., -- எம்.எல்.ஏ., கார்த்திக் கலந்துக்கிட்டாரு,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''நானும் ஒரு மேட்டர் சொல்றேன்... சொக்கம்புதுார் ஏரியால கோவில் திருவிழா நடக்கப் போகுது; அந்த பகுதிய சேர்ந்த தி.மு.க.,காரங்க, பெருசு பெருசா 'பிளக்ஸ்' வச்சிருக்காங்க. விழா செலவுக்குன்னு, 'பார்' நடத்துவறங்கள்ட்ட, கலெக்சன் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.''
''ஓகோ...''
''மேல கேளு... ஒரு கடைக்கு, 25 ஆயிரம் ரூபா கொடுக்கணும்னு நிர்ப்பந்தம் செய்றாங்களாம். கேட்ட பணம் கொடுக்கலைன்னா, ஆள் அனுப்பி, ரகளை பண்ணுவோம்னு, மிரட்டுறாங்கன்னு, 'பார்' சூப்பர்வைசர்ங்க புலம்பி தள்ளுறாங்க.''
''ம்ம்...''
''ஒரு பக்கம் ஆளுங்கட்சிக்காரங்களுக்கு, 'மாமூல்' கொடுக்கணும்; அப்புறம், ஏரியா போலீஸ்காரங்களுக்கு, 'கப்பம்' கட்டணும்; உயரதிகாரிங்க ஆய்வுக்கு வந்தா, அவுங்களையும் 'கவனிக்கணும்'. இப்ப, கடை இருக்கக்கூடாதுன்னு கூட்டம் கூட்டமா பெண்கள் போராட்டம் நடத்துறாங்க... என்ன செய்றதுன்னே தெரியலன்னு மதுக்கடைக்காரங்க புலம்புறாங்க,'' என்று முடித்தாள் சித்ரா.
''மாநகராட்சியில ஏதாச்சும் விசேஷம் இருக்கா?'' என்றாள் மித்ரா.
''இல்லாமலா... கொஞ்சம் கொஞ்சமா வேலைய வேகப்படுத்தி இருக்காங்க... கடமைய செய்யலைன்னா, 'சஸ்பெண்ட்' உத்தரவு வரும்னு உயரதிகாரி, 'வார்னிங்' செஞ்சிருக்காரு... பார்ப்போம், இனியாவது வேலை செய்றாங்களா அல்லது, ஏமாத்திட்டுப் போவாங்களான்னு...'' என்றாள் சித்ரா.
''அதெல்லாம் சரி... நீர் நிலைகளை ஆக்கிரமிச்சு குடியிருக்கிறவங்களுக்கு, வீடு கொடுக்கப் போறாங்கன்னு சொன்னாங்களே... என்னாச்சு... இழுத்துக்கிட்டே போகுதே,'' என்று கேட்டாள் மித்ரா.
''கலெக்டர் சொல்லிட்டாரு... மாநகராட்சி கமிஷனரும் கையெழுத்து போட தயாரா இருக்காரு... அமைச்சரும் சொல்லிட்டாரு... ஆனா, குடிசை மாற்று வாரிய அதிகாரி அசைய மாட்டேங்கிறாரு... அவரு ஏதும் 'எதிர்பார்க்குறாரா'ன்னு தெரியலை. 'அலாட்மென்ட்' கொடுத்து, வீட்டை காலி பண்ணுனாதான், வெள்ளலுார் ராஜவாய்க்காலை துார்வார முடியும். மழை பெஞ்சு வீட்டுக்குள்ள தண்ணீர் புகுந்துச்சுன்னா... குடிசை மாற்று வாரிய அதிகாரி என்ன பண்ணுவாருன்னு தெரியலை,'' என்று முடித்தாள் சித்ரா.
அதற்குள் மீண்டும் லேசாக மழை துாற ஆரம்பிக்க, நடைபயிற்சியை நிறுத்தி விட்டு கிளம்பினர் சித்ராவும் மித்ராவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X