அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி மா.செ., யார்? : தி.மு.க.,வில் கடும் போட்டி

Updated : மே 31, 2017 | Added : மே 30, 2017 | கருத்துகள் (7)
Share
Advertisement

துாத்துக்குடி தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் பெரியசாமி மரணத்தை தொடர்ந்து, அவர் வகித்த பதவிக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவாளரும், மகளிர் அணி செயலர் கனிமொழி ஆதரவாளரும் மல்லுக்கட்டுகின்றனர்.
துாத்துக்குடி பெரியசாமி, நுரையீரல் பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் வகித்த மாவட்ட செயலர் பதவிக்கு, தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ஸ்டாலின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழியின் ஆதரவாளரும், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலருமான பார்த்திபன் ஆகியோர் இடையே, மாவட்ட செயலர் பதவிக்கு போட்டி நிலவுகிறது. இருவரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, இருவரும் போட்டி போட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.இவர்களை தவிர, பெரியசாமியின் மகளும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், பெரியசாமியின் மகனும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் ஆகியோரும், மாவட்ட செயலர் பதவி கேட்டுஉள்ளனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வைர விழா முடிந்த பின், மாவட்ட பொறுப்பாளரை அறிவிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
31-மே-201711:48:31 IST Report Abuse
karunchilai இருவருக்கும் இல்லை. வாரிசுக்குத்தான். கீதா ஜீவன்தான் அடுத்த மாசே
Rate this:
Share this comment
Cancel
Hari Ariyaputhry - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-201710:32:26 IST Report Abuse
Hari Ariyaputhry அனிதா ராதா கிருஷ்ணன்க்கு தான் சரியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
NAMBI - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-201710:26:31 IST Report Abuse
NAMBI அனிதா ராதாகிருஷ்ணன் இல்லனா ராதிகா செல்வி முன்னாள் அமைச்சர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X