முதல்வருடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு

Added : மே 30, 2017 | கருத்துகள் (3)
Share

சபாநாயகர் தனபால், நேற்று, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.சட்டசபை செயலர் ஜமாலுதீனின், பதவி நீட்டிப்பு பணி காலம், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று ஓய்வு பெறும் நிலையில், அவர் மீண்டும் பணி பெற முயற்சிப்பதாக
தகவல்கள் வெளியாகின. இதற்கு, ஜமாலுதீன் மறுப்பு தெரிவித்தார்.ஜமாலுதீன் ஓய்வு பெற்றால், அடுத்து, சட்டசபை செயலகத்தை சேர்ந்த பூபதி, செயலராக நியமிக்கப்படுவார்.
இந்த சூழ்நிலையில், சபாநாயகர் தனபால், நேற்று முதல்வரை சந்தித்து பேசினார்.அப்போது, செயலர் விவகாரம் மற்றும் சட்டசபையை கூட்டுவது குறித்து, இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X