அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாங்கள் கைப்பாவை அல்ல: தம்பிதுரை

Added : மே 30, 2017 | கருத்துகள் (10)
Advertisement
நாங்கள் கைப்பாவை அல்ல: தம்பிதுரை

சென்னை: ''யாருடைய கைப்பாவையாகவும், நாங்கள் செயல்படவில்லை. அந்த அனுபவம், தி.மு.க.,வுக்கு இருக்கலாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை, அ.தி.மு.க., அரசு செய்து வருகிறது. மக்களுக்கு பிடிக்காத ஒன்றை, அ.தி.மு.க., திணிக்காது. யாருக்கும், நாங்கள் பயந்து இருக்கவில்லை. அ.தி.மு.க.,விற்கு என, தனித்துவம் உண்டு. யாருடைய கைப்பாவையாகவும், நாங்கள் செயல்படவில்லை. அந்த அனுபவம், தி.மு.க.,வுக்கு வேண்டுமானால் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், கரூரில், அவர் அளித்த பேட்டி:தமிழகம், அதிகளவில் பொருட்களை உற்பத்தி செய்கிற மாநிலம் என்பதால், ஜி.எஸ்.டி., வரியால் பாதிப்பு ஏற்படும். இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜி.எஸ்.டி., வரியை எதிர்த்தார். ஆனால், மற்ற மாநிலங்கள், ஜி.எஸ்.டி., வரியை ஆதரித்ததால், மசோதா வெற்றி பெற்றுவிட்டது. வேறு வழியில்லாமல், ஜி.எஸ்.டி., வரியை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால், உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. மாட்டிறைச்சிக்கு தடை தொடர்பான சட்ட விஷயத்தில், அ.தி.மு.க.,வுக்கு உடன்பாடு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
01-ஜூன்-201702:03:24 IST Report Abuse
Karthik சசிமத்திய கைப்பாவையாக இருப்பது உண்மை தான். இது எல்லோருக்கும் தெரியும். தும்பிதுரை எப்படி தெரியமானால் போனது.
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
31-மே-201722:47:32 IST Report Abuse
ramasamy naicken இவன் மாவீரன் அலெக்சாண்டர், பாகுபாலி வம்சத்தில் வந்த மாவீரன். ஒரே ஒரு கேள்வி. பெற்ற பெண்ணின் கல்யாணத்திற்கு போகாமல் பேடி மாதிரி நீ ஒளிந்து கொண்டது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
Rangaraj - Coimbatore,இந்தியா
31-மே-201718:38:54 IST Report Abuse
Rangaraj கொள்ளைக்கார பாவையின் கைப்பாவை தான் நீங்களெல்லாம் என்பது நாடறியும் தம்பி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X