நாங்கள் கைப்பாவை அல்ல: தம்பிதுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாங்கள் கைப்பாவை அல்ல: தம்பிதுரை

Added : மே 30, 2017 | கருத்துகள் (10)
நாங்கள் கைப்பாவை அல்ல: தம்பிதுரை

சென்னை: ''யாருடைய கைப்பாவையாகவும், நாங்கள் செயல்படவில்லை. அந்த அனுபவம், தி.மு.க.,வுக்கு இருக்கலாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை, அ.தி.மு.க., அரசு செய்து வருகிறது. மக்களுக்கு பிடிக்காத ஒன்றை, அ.தி.மு.க., திணிக்காது. யாருக்கும், நாங்கள் பயந்து இருக்கவில்லை. அ.தி.மு.க.,விற்கு என, தனித்துவம் உண்டு. யாருடைய கைப்பாவையாகவும், நாங்கள் செயல்படவில்லை. அந்த அனுபவம், தி.மு.க.,வுக்கு வேண்டுமானால் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், கரூரில், அவர் அளித்த பேட்டி:தமிழகம், அதிகளவில் பொருட்களை உற்பத்தி செய்கிற மாநிலம் என்பதால், ஜி.எஸ்.டி., வரியால் பாதிப்பு ஏற்படும். இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜி.எஸ்.டி., வரியை எதிர்த்தார். ஆனால், மற்ற மாநிலங்கள், ஜி.எஸ்.டி., வரியை ஆதரித்ததால், மசோதா வெற்றி பெற்றுவிட்டது. வேறு வழியில்லாமல், ஜி.எஸ்.டி., வரியை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால், உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. மாட்டிறைச்சிக்கு தடை தொடர்பான சட்ட விஷயத்தில், அ.தி.மு.க.,வுக்கு உடன்பாடு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X